Published : 18 Dec 2018 07:47 AM
Last Updated : 18 Dec 2018 07:47 AM

மதுரையில் ரூ.1,264 கோடியில் அமைகிறது; ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: 45 மாதங்களில் செயல்படத் தொடங்கும்

மதுரையில் ரூ.1,264 கோடி யில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்ச ரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகவலை மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் நிர் மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகம் உட்பட 5 மாநிலங் களில் எய்ம்ஸ் மருத்துமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு மத்திய பட் ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக செங்கல்பட்டு, மதுரை தோப் பூர், செங்கிப்பட்டி (தஞ்சா வூர்), ஈரோடு மாவட்டம் பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

இந்த இடங்களை மத்திய சுகாதாரத் துறை குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். இதில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக் கப்படும் என்று 2018-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.

இதற்காக தோப்பூரில் சுமார் 200 ஏக்கர் இடத்தை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தேர்வு செய்து கொடுத்தது. இதையடுத்து தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டுமானப் பணிக்கான மண் பரிசோதனை நடந்தது.

ஆனால், மத்திய அமைச் சரவை ஒப்புதல் வழங்காததால் நிதி ஒதுக்கப்படாமல் மருத் துவமனைக்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அத னால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையுமா என்ற சந்தேகமும் எழுந்தது.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என் பவர், மத்திய அரசு அறிவித்த படி எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் எப்போது அமை யும் என்று உயர் நீதிமன்ற கிளை யில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை டிசம்பர் 6-ம் தேதி நடந்தது. இந்த வழக்கில் மத் திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற் கான மதிப்பீடு மத்திய நிதி குழு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள் ளது. இந்த ஒப்புதல் கிடைத்த தும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்படும். ஒப்பு தல் வழங்கியதில் இருந்து 45 மாதங்களில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மத் திய அமைச்சரவை கூடி மருத் துவமனை அமைய ஒப்புதல் அளித்தது. இத்தகவலை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று இரவு 7.48 மணியளவில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்பு தல் அளித்துள்ளது. இதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் தெலங்கானா மாநிலம் பீபி நகரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கிய தற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதி விட்டுள்ளார்.

இதேபோல், மத்திய சுகா தாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவும் இத்தகவலை ட்விட் டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் நன்றி

மத்திய இணை அமைச் சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது:

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழின் தலைநகரான மதுரைக்கு மேலும் புகழ் சேர்க்கும் வண்ணம் இந்தியா வின் உயரிய எய்ம்ஸ் மருத் துவமனை தந்து, அதை விரைவில் தொடங்க மத்திய அமைச்சரவை மூலம் ஒப்புதல் வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது சார்பிலும் ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பிலும் நன்றியை தெரிவித் துக் கொள்கிறேன். மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்நாளை ஓர் திருவிழாவாகக் கொண்டாடுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக 100 எம்.பி.பி.எஸ் இடங்கள்

l மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை 750 படுக்கைகள் கொண்டதாக இருக்கும்.

l 15 முதல் 20 சூப்பர் ஸ்பெஷாலிட்டி துறைகள் இதில் அமைக்கப்படும்.

l நாளொன்றுக்கு 1,500 புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

l தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்.பி.பி.எஸ்., 60 பி.எஸ்சி நர்சிங் இடங்கள் கிடைக்கும்.

l தமிழகம் மட்டுமன்றி தெலங்கானாவின் பீபி நகரிலும் ரூ.1,028 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப் படும்.

l மதுரை தோப்பூர், பீபி நகர் மருத்துவமனைகள் 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x