Published : 28 Dec 2018 09:21 AM
Last Updated : 28 Dec 2018 09:21 AM

கிறிஸ்துமஸை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை சோதனை: 570 கடைகள், நிறுவனங்களுக்கு அபராதம் - விதிகளை பின்பற்றாததால் நடவடிக்கை

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடைகள், வணிக நிறுவனங்களில் தொழிலாளர் நலத் துறை நடத்திய சோதனையில் 570 கடைகள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

எடையளவு சட்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, பேக்கரி, ஜவுளி கடைகள் என 1,632 கடைகள், நிறு வனங்களில் எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதி களின் கீழ் சோதனை நடத்தப் பட்டது.

விதிகளின்படி பொட்டலமிடு பவர் பெயர், முழு முகவரி, நுகர் வோர் பாதுகாப்பு எண், மின்னஞ் சல் முகவரி, பொருளின் பெயர், பொருளின் நிகர எடை, எண் ணிக்கை, பொட்டலமிடப்பட்ட ஆண்டு, அதிகபட்ச சில்லறை விற் பனை விலை ஆகியவை சரியாக உள்ளனவா என ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் இந்த விதிகளை பின் பற்றாத 181 கடைகள், நிறுவனங் கள் மீது நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு அபராதம் வசூலிக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.

1,176 நகைக் கடைகளில் ஆய்வு

1,176 நகைக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் விதிகளை பின்பற்றாத 389 நகைக் கடைகளிடம் இருந்து அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 570 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழக அர சின் செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x