Published : 09 Dec 2018 10:36 AM
Last Updated : 09 Dec 2018 10:36 AM

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க 2.38 நிமிடங்களில் 103 யோகாசனங்களை செய்து அசத்திய மாணவி: நியூசிலாந்து மாணவியின் உலக சாதனையை முறியடிக்க முயற்சி

உலக சாதனைக்கான புத்தகத்தில் இடம்பிடிக்கும் வகையில், தி.மலையில் 6-ம் வகுப்பு மாணவி 2.38 நிமிடங்களில் 103 யோகா சனங்களை செய்து அசத்தினார்.

திருவண்ணாமலை அய்யங்குள அக்ரஹாரத் தெருவில் வசிப்பவர் இந்திரஜித்-ரேகா தம்பதியின் மகள் மிஷ்தி(10). தி.மலையில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், 2.38 நிமிடங்களில் 103 யோகாசனங்களை செய்து உலக சாதனை படைக்கும் முயற்சி நேற்று ஈடுபட்டார். தேரா பந்த் யுவக் பரிஷத் மற்றும் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பில் தி.மலையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று உலக சாதனைக் கான யோகாசனம் நடந்தது. ‘யூனிவெர்சல் புக்ஸ் ஆப் ரெக்கார்டு’ அமைப்பைச் சேர்ந்த ரவி, ராஜா ஆகியோர் முன்னி லையில்103 ஆசனங்களை 2.38 நிமிடங்களில் செய்து முடித்ததாக, மாணவியின் பயிற்சியாளர் கல்பனா தெரிவித்தார்.

இது குறித்து மாணவி மிஷ்தி கூறும்போது, “எனது சகோதரி யோகாசன பயிற்சிகளை செய்வார். அவருடன் விளையாட்டாக செய்து பழகினேன். இதனை பார்த்த யோகாசன மூத்த ஆசிரியர் சுரேஷ் குமார், என்னை ஊக்கப்படுத்தி உலக சாதனைக்கு அடித்தளம் வகுத்துக் கொத்தார். கடந்த 2 மாதமாக தீவிர பயிற்சி செய்தேன். 3 நிமிடங்களில் 103 ஆசனங்களை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், யோகாசன ஆசிரியர் கல்பனா பயிற்சி அளித்தார். இரண்டு ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் முயற்சியால், 103 யோகாசனங்களை 2.38 நிமிடங்களில் செய்து முடித் துள்ளேன். யோகாசனம் செய்வது உடலுக்கு நல்லது. யோகாசனத்தின் முக்கியத்துவத்தை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்வேன். எனது சாதனை முயற்சிக்கு ஊக்குவித்த ஆசிரியர்கள், துணையாக இருந்த பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி” என்றார்.

இது குறித்து விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிர்வாகியும், மூத்த யோகாசன ஆசிரியருமான சுரேஷ்குமார் கூறும் போது, “நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் கிறிஸ்டி என்ற சிறுமி, 3 நிமிடங்களில் 84 யோகாசனங்களை செய்தது உலக சாதனை பட்டியலில் உள்ளது.

அந்த சாதனையை முறியடிக்க முயற்சி எடுக்கப்பட்டு, மாணவி மிஷ்தி மூலம் 2.38 நிமிடங்களில் 103 ஆசனங்கள் செய்து காண் பிக்கப்பட்டுள்ளது. உலக சாதனையை அங்கீகரிக்கும் ‘யூனி வெர்சல் புக்ஸ் ஆப் ரெக்கார்டு’ அமைப்பைச் சேர்ந்த ரவி, ராஜா ஆகியோர் நேரில் பார்வையிட்டு, வீடியோவில் பதிவு செய்துள்ளனர். மாணவி மிஷ்தியின் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார். மாணவியின் உலக சாதனை முயற்சியை பாராட்டி, தி.மலை ஆட்சியர் கந்தசாமி பரிசு வழங்கி கவுரவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x