Published : 04 Dec 2018 09:38 AM
Last Updated : 04 Dec 2018 09:38 AM

ஊதிய உயர்வை வலியுறுத்தி சென்னையில் அரசு டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம்

ஊதிய உயர்வை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டான்லி மருத்துவமனையில்

தமிழகத்தில் அரசு டாக்டர்கள் ஊதிய உயர்வை வலியுறுத்தி பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் சென்னை ராய புரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று நடந்தது.

சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் தலை மையில் நடந்த உண் ணாவிரதப் போராட்டத்தில் தமிழகம் முழு வதும் இருந்து ஏராளமான அரசு டாக்டர்கள் பங்கேற்றனர்.

அப்போது ஜனநாயக தமிழ் நாடு அரசு டாக்டர்கள் சங்கத் தின் மாநிலத் தலைவர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

ரூ.1.50 கோடி இழப்பீடு

6-வது ஊதியக்குழு குறை பாடுகளைக் களைந்து அனைத்து மாநிலங்களுக்கு இணையாக தமிழகத்தில் பணிபுரியும் அரசு டாக்டர்களுக்கு ஊதியம் மற்றும் பணப்படிகள் வழங்க வேண்டும். இதேபோல் அரசு டாக்டர் பணி யில் இருக்கும்போது உயிரிழக்க நேரிட்டால், அவருடைய குடும்பத் துக்கு ரூ.1.50 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.

இந்த இழப்பீட்டுத் தொகைக் காக தமிழ கத்தில் உள்ள 20 ஆயிரம் அரசு டாக்டர்களும் மாதம் ரூ.500 கட்டி வருகின் றனர்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறும். எங்களுடைய அடுத்தகட்டப் போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப் படும்.

இவ்வாறு டாக்டர் பி.பால கிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x