Last Updated : 26 Dec, 2018 08:38 AM

 

Published : 26 Dec 2018 08:38 AM
Last Updated : 26 Dec 2018 08:38 AM

திமுக - காங். கூட்டணியை வீழ்த்த பாஜக வியூகம்: அதிமுக, பாமக, தேமுதிகவை இணைத்து கூட்டணி அமைக்க முயற்சி

திமுக - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த அதிமுக, பாமக, தேமு திகவை இணைத்து மெகா கூட்டணி அமைக்க பாஜக முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.

வரும் ஏப்ரல் - மே மாதங் களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. வரும் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அட்டவணை வெளியாகவுள்ளது. அதற்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் நிலையில் முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு என தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைமை யில் காங்கிரஸ், மதிமுக, மார்க் சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடு தலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இணைந்துள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார். இதன்மூலம் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி யாகியுள்ளது. அதிமுக பிளவுபட்டி ருப்பதாலும், ஜெயலலிதாவுக்கு இணையான வலிமையான தலைமை இல்லாததாலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வலிமையான தாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 2014 தேர்தலில் 282 தொகுதிகளில் வென்று தனித்து ஆட்சியமைத்த பாஜக, இந்த தேர் தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் கிடைத்த தோல்வி பாஜகவுக்கு பின்ன டைவை ஏற்படுத்தியுள்ளது. இருப் பினும், பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம், ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டை பாஜக முடித்துள்ளது. பாஜகவைப் பொறுத்தவரை தங்கள் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கிறது என்பதைவிட காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றுவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, “2014 போல தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் தனிப்பெரும் கட்சியாக பாஜக வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். 250-க்கும் குறைவான தொகுதிகளைப் பெற்றால் எங்களால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற் படும். எனவே, காங்கிரஸ் கட்சிக்கு எந்த அளவுக்கு இடங்கள் குறை கிறதோ, அந்த அளவுக்கு பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிக ரிக்கும். எனவே, அதற்கேற்ப வியூகங்களை மோடியும், அமித் ஷாவும் வகுத்து வருகின்றனர்'' என்றார்.

“காங்கிரஸின் வெற்றியை பாஜகவால் தடுக்க முடியுமா?” என்று அவரிடம் கேட்டபோது, ''அரசியலில் சாத்தியமில்லாதது என்று எதுவும் இல்லை. அதிக எம்.பி. இடங்களைக் கொண்ட உத்தரப்பிரதேசம் (80), மகாராஷ் டிரம் (48), மேற்கு வங்கம் (42), பிஹார் (40), தமிழகம் (39) ஆகிய மாநிலங்களில் கூட்டணி இல்லாமல் காங்கிரஸால் வெல்ல முடியாது. இதில் மகாராஷ்டிரம், தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு கூட்டணி உள்ளது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்த வரை திமுக - காங்கிரஸ் கூட்ட ணியை வீழ்த்த எங்களால் முடி யாது. எனவே, அதிமுகவை இணைத்து பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைக்க மோடியும், அமித்ஷாவும் முயற்சித்து வருகின் றனர்” என்றார்.

அதிமுகவை இணைக்க பாஜக முயற்சித்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருந்தாலும் அதனை பாஜக தரப்பிலும், அதிமுக தரப் பிலும் யாரும் மறுக்கவில்லை. அதேநேரத்தில் அதிமுக இணைப் புக்கு வாய்ப்பில்லை என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆனாலும், இணைப்புக்கான பேச்சுகள் திரைமறைவில் நடந்து வருவதாக அதிமுக, பாஜக, அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின் றன. டிடிவி தினகரன் தனித்து போட்டியிட்டால் திமுக எளிதாக வென்றுவிடும் என்பதை முதல்வர் பழனிசாமி உணர்ந்துள்ளதால் அவரும் இணைப்பை விரும்புவ தாகக் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக விரும்ப வில்லை என்றும், அப்படி வைத் தால் 15 சதவீத சிறுபான்மையினரின் வாக்குகள் திமுக அணிக்குச் சென்று விடும் என்று முதல் வர் பழனிசாமி அச்சம் தெரிவித் துள்ளதாக அக்கட்சியினர் தெரி விக்கின்றனர். அதிமுகவுடன் கூட்டணி ஏற்படாவிட்டாலும், திமுக - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த அதிமுகவை இணைத்து பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணியை உருவாக்க பாஜக முயற்சித்து வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இது தெரிந்துதான் பாஜகவையும், பிரதமரையும் திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x