Published : 21 Dec 2018 09:37 AM
Last Updated : 21 Dec 2018 09:37 AM

பொதுமக்களின் பாதுகாப்புக்காக மெரினாவில் சிசிடிவி, உயர் கோபுர மின் விளக்குகள்:  மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் தகவல்

பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக சென்னை மெரினா கடற்கரையில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள், உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சென்னை மாநக ராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மெரினா கடற்கரைக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக் கள், சுற்றுலா பயணிகள் வந்து செல் கின்றனர். கடற்கரையை தூய்மையாக பராமரிப்பதற்காக அங்குள்ள சிறு கடைகள் முறைப்படுத்தப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டன. அங்கு சேகரமாகும் குப்பைகள் மாநக ராட்சி துப்புரவு, சுகாதாரப் பணியாளர் களால் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகின்றன. அங்கு மக்களின் பாது காப்பை உறுதிசெய்யும் வகையில் மாநகர காவல் துறை சார்பாக ரோந்து காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநகராட்சி சார்பில் ரூ.6 கோடியே 78 லட்சத்தில் 8 நவீன டிராக்டர்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் இயக்கப்படும் மணல் சலிக்கும் இயந் திரங்களைக் கொண்டு கடற்கரை சுத்தம் செய்யப்படுகிறது. இந்த இயந் திரங்கள் கண்ணாடி, பிளாஸ்டிக் போன்ற பொருட்களை தனித்தனியே பிரித்தெடுக்கும் திறன் கொண்டது. ஒரு மணி நேரத்தில் 8 ஏக்கர் பரப்பு உடைய இடத்தை சுத்தம் செய்யக் கூடியது.

இயந்திரங்களைக் கொண்டு கடற்கரை சுத்தம் செய்யப்படும் பணிகளை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகி யோர் நேற்று ஆய்வு செய்தனர்.

பின்னர் அவர்கள் கூறியதாவது:

கடற்கரைக்கு வருபவர்களின் வசதிக்காக மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்பட 150 புதிய குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன.

மெரினா கடற்கரைக்கு வரும் மக் கள், சுற்றுலா பயணிகளின் பாது காப்பை உறுதிசெய்யவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் மாநகர காவல் துறை சார்பில் புதிதாக கண் காணிப்பு கேமராக்கள், உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட உள் ளன. கடற்கரையில் ரோந்து காவலர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, இரவு நேரத்திலும் காவலர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி துணை ஆணையர்கள் எம்.கோவிந்த ராவ், பி.மதுசூதன் ரெட்டி, சுபோத் குமார், தலைமைப் பொறியாளர் (கட்டிடம்) என்.மகேசன், மண்டல அலுவலர் எஸ்.அனிதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x