Published : 21 Dec 2018 08:05 AM
Last Updated : 21 Dec 2018 08:05 AM

மக்களுக்கு ரூ.100 கோடியில் நலத்திட்டப் பணிகள்; ஸ்டெர்லைட் ஆலை 2 மாதத்தில் திறக்கப்படும்:தலைமைச் செயல் அதிகாரி பி.ராம்நாத் தகவல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, 2 மாதத்தில் மீண்டும் திறக்கப்படும் என்று அதன் தலைமைச் செயல் அதிகாரி பி.ராம்நாத் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் ரூ.100 கோடி செலவில் பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தி யாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

ஸ்டெர்லைட் ஆலையால் நேரடியாக 4 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 25 ஆயிரம் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெற்றனர். ஆலைக்காக தினமும் ஆயிரம் லாரிகள் இயக்கப்பட்டன. அதை நம்பி ஓட்டுநர்கள், கிளீனர்கள் என 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை பெற்றிருந்தனர். ஸ்டெர்லைட் ஆலை கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருப்பதால், அப்பகுதியில் வளர்ச் சியே தடைபட்டுள்ளது. குறிப்பாக தூத்துக் குடி துறைமுகத்துக்கு 20 சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் தாமிர தேவையில் 36 சத வீதத்தை ஸ்டெர்லைட் ஆலை பூர்த்தி செய் கிறது. இந்த ஆலை மூடப்பட்டதால், தாமிர விலை உயர்ந்தது. கோவையில் உள்ள மோட் டார் உற்பத்தி தொழிற்சாலைகள், பல்வேறு மின்சாதன உற்பத்தி தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள அனைவருக் கும் வீடு திட்டம், தாமிரம் இன்றி சாத்திய மாகாது. மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் காற்று, சூரியஒளி மின்சாரத்துக்கும் அதிக அளவில் தாமிரம் தேவை.

தேசிய பசுமைத் தீர்ப்பாய தீர்ப்பின்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர் பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை அணுகி, உரிய ஆவணங்களை சமர்ப் பித்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் 2 மாதங்களில் தொழிற்சாலை திறக்கப்படும். கடந்த 6 மாதங்களாக தொழிற்சாலை மூடிக் கிடப்பதால், ஆலை திறந்தாலும் அதை இயக்க சுமார் 6 மாதங்கள் பராமரிப்புப் பணிகளை செய்ய வேண்டி இருக்கும்.

தொழிற்சாலை பகுதியில் பசுமைப் போர் வையை அதிகரிக்க அரசிடம் சுமார் 300 ஏக்கர் நிலம் கேட்டிருக்கிறோம். தேசிய பசுமைத் தீர்ப் பாய வரைவு தீர்ப்பு முன்கூட்டியே வெளியான தாக காவல் துறையில் புகார் தெரிவிக்கப்பட்ட தாக அறிந்தேன். காவல் துறை விசாரித்து உண்மையை வெளியில் கொண்டு வரும்.

ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில், தூத்துக் குடி பகுதியில் மக்கள் தொடர்பு திட்டத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல் படுத்தி இருக்கிறோம். பொதுமக்களுக்கு எத்தகைய திட்டங்கள் தேவை என்பதை, அவர்களிடம் கருத்து கேட்டு, அவர்கள் விரும்பியவாறு அப்பகுதியில் நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

அதன்படி தூத்துக்குடி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் பேரை அழைத்து கருத்து கேட் டோம். அதன் அடிப்படையில் அப்பகுதியில் ரூ.100 கோடி செலவில், ஸ்மார்ட் பள்ளி, தர மான மருத்துவமனை, 15 கிராமங்களில் சுகா தாரமான குடிநீர் விநியோகம், அப்பகுதியில் பசுமையை ஏற்படுத்தும் விதமாக 10 லட்சம் மரக்கன்றுகள் நடவு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 100 சதவீதம் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் ஆகியவற்றை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கலவரத்தில் உயிரிழந்தோர் குடும்பங் களுக்கு, அரசு வழங்கிய நிவாரணத் தொகை அளவுக்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் வழங்கத் தயாராக உள்ளது.

இவ்வாறு பி.ராம்நாத் தெரிவித்தார். அப் போது, தொழிற்சாலையின் துணைத் தலைவர் எஸ்.முருகேசன், துணை பொதுமேலாளர் அனூப் தியோ ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x