Published : 16 Dec 2018 08:17 AM
Last Updated : 16 Dec 2018 08:17 AM

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வீடுகள் கட்ட மத்திய அரசு ரூ.6,500 கோடி ஒதுக்கீடு: பாஜக தலைவர் தமிழிசை தகவல்

புயலால் பாதிக்கப்பட்ட இடங் களில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உடனடியாக 1 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டித்தருவதற்காக மத்திய அரசின் பங்காக ரூ.6,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித் தார்.

சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது: மத்திய அரசின் நடவடிக் கையால் பெட்ரோல், டீசல் விலை ரூ.10-க்கு மேல் குறைந்துள்ளது. மாற்று எரிசக்தியை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா 2-வது பெரிய நாடாக வளர்ச்சியடைந்து வரு கிறது. பல்வேறு திட்ட நடவடிக் கைகளால் வரும் காலங்களில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பெருமளவு குறையும்.

ரூ.200 கோடி உடனடி ஒதுக்கீடு

தமிழகத்தில் புயல் பாதிப்பு குறித்து அறிந்ததும் பிரதமர் மோடி உடனடியாக மத்திய குழுவை அனுப்பினார். மேலும், மின் பாதிப்புகளை சரிசெய்ய உடனடியாக ரூ.200 கோடியை அவர் ஒதுக்கீடு செய்தார்.

புயலால் பாதிக்கப்பட்ட இடங் களில் வீடுகளை இழந்தவர்களுக்கு பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உடனடியாக 1 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டித் தருவதற்காக மத்திய அரசு ரூ.6,500 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதவிர, புயல் பாதித்த மாவட்டங்களுக்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின்கீழ் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப் பட உள்ளது.

மேலும், அப்பகுதி மக்களின் தேவையை கருத்தில் கொண்டு 3 லட்சம் லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.

சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்தபோது மேகே தாட்டு பிரச்சினை குறித்து அவர்களிடம் பேசியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப் பிட்டார். எனவே, மேகேதாட்டு குறித்து சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் என்ன கூறினார்கள் என்பதை மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் தெளிவு படுத்த வேண்டும்.

இவ்வாறு தமிழிசை சவுந்திர ராஜன் கூறினார்.வீடுகளை இழந்தவர்களுக்கு பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உடனடியாக 1 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டித் தருவதற்காக மத்திய அரசு ரூ.6,500 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x