Published : 03 Dec 2018 08:38 AM
Last Updated : 03 Dec 2018 08:38 AM

அரசு மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு

அரசு மருத்துவமனையிலேயே பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங் கும் பணி தொடங்கியுள்ளது. இதற்கு நகராட்சி நிர்வாகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிறப்பு, இறப்பு குறித்த சான்றி தழ்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, தாலுகா அலுவலகங் களில் வழங்கப்பட்டு வந்தது. இந் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவமனை அள விலேயே தனி அலுவலர் நியமிக் கப்பட்டு, பிறப்புச் சான்றிதழ் வழங் கப்படுவது தொடங்கப்பட்டது.

இதற்காக வெளியிடப்பட்ட அர சாணையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தாலுகா மருத்துவமனை, மருத்துவ கல்லூரி மருத்துவமனை களில் நிகழும் பிறப்பு மற்றும் இறப்புகளை மட்டும் பதிவு செய்ய, பொது சுகாதார துறை யின் மூலம் பல்நோக்கு சுகாதார மேற்பார்வையாளர்களை தனி பதிவாளராக அங்கீகரித்து, அவர் கள் மூலம் பிறப்பு, இறப்பு பதிவு செய்ய உத்தர விடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தனியார் மருத் துவமனைகள், வீடுகள் போன்ற வற்றில் பிறப்பு, இறப்பு ஏற்படின், சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிலேயே சான்று பெற்று கொள்ளலாம்.

இந்தப் புதிய நடைமுறைக்கு சுகாதார ஆய்வாளர்கள் கூட்ட மைப்பு எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி ஆணையரகத்துக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், பொது நலவழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதார ஆய்வா ளர் கூட்டமைப்பு நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

நகராட்சிகளில், 1920-ம் ஆண்டு களில் இருந்தே பிறப்பு, இறப்பு களை பதிவு செய்ய, துப்புரவு ஆய்வாளர்கள் பிறப்பு இறப்பு பதிவு ஆய்வாளர்களாக நியமனம் செய்யப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது உள்ளாட்சி சட்டப்படி அடிப்படை உரிமை ஆகும். தற்போது பொது சுகாதார துறையினர், நகராட்சி நிர்வாக ஆணையரகத்தை கலந்து ஆலோசிக்காமல், புதிய அர சாணை பிறப்பித்துள்ளனர்.

பிறப்பு, இறப்பு பதிவுகளுக்கு அதிகாரியாகவும் மற்றும் பதிவேடு களின் பொறுப்பாளராகவும், மத்திய பிறப்பு, இறப்பு பதிவு சட்டம், 1969-ன் படி, நடவடி‌க்கை எடு‌க்க, ஆணையாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக நியமனம் செய்யப்படும் அரசு மருத்துவமனை பதிவாளர், யாரிடம் அறிக்கை செய்வது?, பதிவேடுகளில் திருத்தம் செய்ய அனுமதியை யாரிடம் பெறுவது என்ற குழப்பம் உருவாகும். மேலும் உள்ளாட்சிகளுக்கு வரவேண்டிய வருமானத்திலும் இழப்பு ஏற்படு கிறது.

வீடுகள், தனியார் மருத்துவ மனைகள் ஆகியவற்றில் நிகழும் பிறப்பு, இறப்புகளை, பதிவு செய்ய நகராட்சி நிர்வாகமும், அரசு மருத்துவமனையில் நிகழும் பிறப்பு, இறப்புகளை பதிவு செய்ய பொது சுகாதார துறையும் என ஒரே பகுதிக்கு இருவேறு துறையை சேர்ந்த பதிவாளர்கள் இருப்பது, பொது மக்களுக்கும் நிர்வாகத்துக்கும் மிகப்பெரிய குழப்பத்தை உருவாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x