Published : 20 Dec 2018 08:29 AM
Last Updated : 20 Dec 2018 08:29 AM

பிளாஸ்டிக் தடையை மறுபரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு சரத்குமார் வேண்டுகோள் 

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. நமது தினசரி வாழ்வில் உணவுப் பொருட்கள், ரத்த உறைகள், லென்ஸ்கள், பேஸ்மேக்கர் என பிளாஸ்டிக் பயன்பாடு முக்கிய அங்கம் வகிக்கிறது. தமிழகத்தின் மொத்த பொருளாதாரத்தில் 25 சதவீதம் சிறு வியாபார தொழில் மூலம் நிகழ்கின்றன. அதில் பிளாஸ்டிக் தொழில் முக்கியமானது. பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பது குடிசைத்தொழில் போல 5 லட்சத் துக்கும் அதிகமான மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது.

பிளாஸ்டிக் விற்பனையில் தமிழகம் மிகப்பெரிய சந்தையாக உள்ளது. நமது மாநிலத்துக்கு கிடைக்கக்கூடிய ஜிஎஸ்டி வருவாயில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் பிளாஸ்டிக் தொழில் மூலம் கிடைக்கிறது. பிளாஸ்டிக் தார் சாலைகள் பாதுகாப்பாகவும், நீண்டகாலம் உழைப்பதாகவும் உள்ளன. பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து வழங்குவதால் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு பலன் களை கொண்டுள்ள இந்த தொழில், அரசின் முடிவால் பெரிதும் பாதிக்கப்படும். உலகளவில் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப் பட்டு, தேவைக்கேற்ற பொருட் களாக பயன்படுத்தப்படுகின்றன.

சுற்றுச்சூழலை பாதுகாக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்ய அரசு முன்வர வேண்டும். மேலும், பிளாஸ்டிக் தடையை அரசு மறுபரிசீலனை செய்ய முன்வர வேண்டும். அதை நம்பியுள்ள தொழில் நிறுவனங்கள் வேறு தொழிலுக்கு மாற போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x