Last Updated : 04 Dec, 2018 08:59 AM

 

Published : 04 Dec 2018 08:59 AM
Last Updated : 04 Dec 2018 08:59 AM

‘டிக் டாக்’ மியூசிக் செயலியால் விபரீதம்: பாடலுக்கு ஏற்ப நடித்தபோது கத்தியால் கழுத்து அறுபட்ட இளைஞர் - சமூக வலைதளங்களில் பார்த்தவர்கள் அதிர்ச்சி

‘டிக் டாக்’ மியூசிக் செயலியில் பாடலுக்கு ஏற்ப நடித்தபோது நிஜமான கத்தியை வைத்து கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.

‘டிக் டாக்’ எனப்படும் மியூசிக் செயலியில் பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு ஏற்ப அசைவுகள் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். கல்லூரி மாணவ-மாணவிகள் இதில் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றனர். இவற்றை பார்ப்பதற்கு நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தா லும், சிலரின் வீடியோக்கள் ஆபா சமாகவும் அபாயமானதாகவும் உள்ளன. இவற்றை தணிக்கை செய்வதற்கான சட்டங்கள் எதுவும் நடைமுறையில் இல்லாததால் கட்டுப்பாடு இல்லாமல் இது போன்ற செயலிகள் செயல்பட்டு வருகின்றன.

இளைஞர் ஒருவர் ‘டிக் டாக்’ செயலியில் பாடலுக்கு ஏற்ப நடித்தபோது, நிஜக் கத்தியை கையில் வைத்துக் கொண்டு நடிக்கிறார். அப்போது, எதிர்பாராத விதமாக தன்னைத்தானே கழுத் தில் அறுத்து விடுகிறார். உடனே, ரத்தம் வெளியேற, அதிர்ச்சி அடைந்த இளைஞர், செல்போனை அணைத்துவிட்டு செல்கிறார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வீடியோவாக அப்படியே வெளி வந்துள்ளது. சிலர் இதைப் பார்த்து கடும் அதிர்ச்சியும் அடைந்துள்ள னர். அந்த இளைஞர் யார், அவருக்கு மேற்கொண்டு என்ன ஆனது போன்ற விவரங்கள் தெரியவில்லை.

‘டிக் டாக்’ செயலி சீனா நாட்டு நிறுவனத்தை சேர்ந்தது. இந்த செயலியை பயன்படுத்தும்போது, செல்போன் ஸ்கீரினில் ஆபாச வீடியோ குறித்த விளம்பரம் வருகிறது. அதை கிளிக் செய்து உள்ளே செல்பவர்களுக்கு தொடர்ந்து ஆபாச வீடியோக்கள் அனுப்பப்படுகின்றன. பாடலுக்கு ஏற்ப அசைவுகள் செய்வது மட்டும்தானே என்று ஆரம்பித்து, இளைஞர்களை மற்றொரு பாதைக்கு அழைத்து செல்கிறது ‘டிக் டாக்’ செயலி.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறும்போது, “இது போன்ற செயலிகள் மீது நடவ டிக்கை எடுக்கும் அதிகாரம் மத்திய தொலைத்தொடர்பு ஆணையத் திடம் உள்ளது. தொழில் நுட்பம் அடைந்துள்ள வளர்ச்சிக்கு ஏற்ப, அதில் ஏற்படும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வசதிகள் சைபர் கிரைம் போலீஸில் இல்லை” என்றனர்.

மனநல மருத்துவர் தேவராஜ் கூறும்போது, “தன்னை பற்றி மற்ற வர்கள் புகழ்ந்து பேச வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள்தான் தங்களைதானே வீடியோ எடுத்து வெளியிடுகின்றனர். இதுபோன்ற நபர்கள் பொதுவாகவே தன்னம் பிக்கை இல்லாதவர்களாக இருப் பார்கள். இதுவும் ஒருவகையான மனநல குறைபாடு” என்றார்.

டிக் டாக் செயலியில் போலீஸார்

‘டிக் டாக்’ செயலி மோகம் போலீ ஸாரையும் விட்டு வைக்கவில்லை. காவலர் ஒருவர் ‘நான் ஏரிக்கரை மேலிருந்து...’ என்ற பாடலையும் சென்னை ஆயுதப்படையை சேர்ந்த துணை ஆணையர் ஒருவர், ‘வா வெண்ணிலா உன்னைத்தானே...’ என்ற பாடலையும் பாடி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள் ளனர். இதேபோல ஏராளமான போலீஸாரும் இந்த செயலியில் பாட்டுப்பாடி வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில்தான் பணியில் இருக்கும் போலீஸார் செல் போன் பயன்படுத்துவதற்கு கட்டுப் பாடுகள் விதித்து டிஜிபி டி.கே. ராஜேந்திரன் சுற்றறிக்கை அனுப்பி யிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x