Published : 26 Nov 2018 09:32 AM
Last Updated : 26 Nov 2018 09:32 AM

வாகனங்களில் பொருத்தப்படும் மின்னணு ஹாரன்களால் சென்னையில் அதிகரிக்கும் ஒலி மாசு

சென்னை போன்ற மாநகரங்களில் பெரும்பாலான கனரக மற்றும் சிறிய வகை வாகனங்கள், ஆட் டோக்கள், இருசக்கர வாகனங் களில் பொருத்தப்படும் அளவுக்கு அதிகமாக ஒலி எழுப்பும் ‘மின்னணு ஹாரன்’களால் ஒலி மாசு அதிகரிக்கிறது. இதனால் சாலைகளில் செல்லும் பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக, ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவ மனைகள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இருக்கும் பகுதிகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களால் பெரிய பாதிப்பு ஏற்படுகின்றன.

100 டெசிபல் அளவு

மாசு கட்டுப்பாட்டு வாரிய சட்டத்தின்படி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு ஹாரன்கள் 72 டெசிபல் அளவில் இருக்க வேண்டும். ஆனால் 100 டெசிபல் அளவுக்கு மேலே ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத் துகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் சக வாகன ஓட்டிகள் பாதிக் கப்படுகின்றனர். விதிமீறி செல்பவர் கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்கு வரத்து போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறும்போது, ‘‘குடியிருப்பு பகுதிகளில் கூட இப்போது வாக னங்கள் அதிகளவில் செல்கின் றன. அதிக ஒலி எழுப்பும் ஹாரன் களால் முதியோர், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இதுதொடர் பாக யாரிடம் புகார் அளிப்பது என்பது கூட தெரியவில்லை’’ என் றனர்.

இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வாகனங்களுக்கு ஆண்டுதோறும் எப்சி (தகுதி சான்று) வழங்கும்போது ஒலி மாசு ஏற்படுத்தும் ஹாரன் இருந்தால் உடனடியாக அகற்றிவிடுவோம்.

அபராதம் வசூலிக்கப்படும்

ஆனால், அவர்கள் எப்சி பெற்ற அடுத்த சில நாட்களிலேயே தங் களுக்கு வசதியான மின்னணு ஹாரன் பொருத்திக் கொள்கின் றனர். அதிகளவில் ஒலி எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்தினால், ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.1000 வரையில் அபராதம் வசூலிக்கப் படும்.

அதிக ஹாரன்களை எழுப்பு வோர் மீது சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அல்லது போக்குவரத்து போலீ ஸாரிடம் புகார் அளிக்கலாம். அப்படி புகார் வரும்போது, நாங்கள் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்போம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x