Published : 01 Nov 2018 02:44 PM
Last Updated : 01 Nov 2018 02:44 PM

ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு: பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற போட்டிகள்

சென்னையில் பள்ளி மாணவ, மாணவியருக்கு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29 முதல் நவம்பர் 3 வரை ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், ஊழல் ஒழிப்பு விழிப் புணர்வு வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ - மாணவிகளுக்கு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் (என்எல்சி) இணைந்து விவேகானந்தா எஜிகேஷனல் சொசைட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது.

சென்னை வியாசர்பாடி ஸ்ரீமதி நர்பதா தேவி ஜே அகர்வால் விவேகானந்த வித்யாலயாவில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வியாசர்பாடி விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் முதல்வர் சுபஸ்ரீ ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். தேசிய ஒற்றுமை தினம் மற்றும் ஊழலுக்கு எதிராக மாணவ, மாணவியர் உறுதி மொழி ஏற்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி பேசினார்.

சென்னை பெரம்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் தாளாளர் ஸ்ரீனிவாசன் போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது தேசபக்தி பற்றியும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.

சர்தார் படேல் குறித்து 7-ம் வகுப்பு இ பிரிவு மாணவி நிரஜா ஆங்கிலத்தில் பேசினார். தமிழில் 6-ம் வகுப்பு பி பிரிவு மாணவி சஞ்சனா பேசினார். பல்வேறு போட்டிகளுக்கும் நடுவராக பங்கேற்றவர்களை, பெரம்பூர் வியாசர்பாடி விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் தாளாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் வியாசர்பாடி விவேகானந்தா வித்யாலயாவின் தாளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கவுரவித்தனர்.

ஊழல் ஒழிப்பு உறுதிமொழியை 11-ம் வகுப்பு ஏ பிரிவு மாணவி மகாலட்சுமி வாசிக்க, மாணவ, மாணவியர் பின் தொடர்ந்து உறுதி மொழி ஏற்றனர். பல்வேறு விதமான 20 போட்டிகள் நடைபெற்றன. இதில், 495 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நிறைவு நிகழச்சியில் விவேகானந்தா எஜிகேஷனல் சொசைட்டியின் துணைத் தலைவர் டி. சக்கரவர்த்தி வரவேற்க, என்எல்சிஐஎல் நிர்வாக இயக்குநர்/ மக்கள் தொடர்பு  (ஓய்வு) எஸ்.ஸ்ரீதர் தலைமையுரை ஆற்றினார்.

ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி நிலமாதவனானந்தா விழா பேரூரை ஆற்றினார். ஊழலை ஒழிப்பது பற்றியும், புதிய இந்தியாவை உருவாக்குவது பற்றியும் அவர் பேசினார். என்எல்சிஐஎல் (கண்காணிப்பு) தலைமை பொது மேலாளர் எம்.ராகவன் பங்கேற்று பேசினார். வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலை நிகழச்சிகளும் நடைபெற்றன. 111 மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வியாசர்பாடி விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் தாளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x