Published : 20 Nov 2018 05:54 PM
Last Updated : 20 Nov 2018 05:54 PM

அனுமதியின்றி இயங்கிய தண்ணீர்கேன் நிறுவனத்துக்கு உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைப்பு

மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் சாலையில் அனுமதி இன்றி இயங்கிய தனியார் தண்ணீர் கம்பெனிக்கு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்

தமிழ்நாடு மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவின் பேரில் திருவள்ளூவர் மாவட்டம்  மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் சாலையில் மீனாட்சி கல்லூரி அருகே இந்திரகுமார் என்பவர் சொந்தமாக எஸ்.ஆர்.கே நேச்சுரல் புராடக்ட் என்ற தனியார் குடிநீர் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

லைசன்ஸ், உணவு பாதுகாப்பு உரிமம் இன்றி இது செயல்படுவதாக உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் கவனத்திறுகு கொண்டுவரப்பட்டது. அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அது உண்மை என தெரியவந்தது.

இதையடுத்து பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற முறையில் குடிநீர் விநியோகம் செய்து வந்த காரணத்தாலும், உரிமம் இன்றி செயல்பட்டதாலும் மேற்கண்ட கம்பெனிக்கு நேரில் சென்ற உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் நியமன அலுவலர் கவிகுமார் தலைமையில் ரவிச்சந்திரன், சிவானந்தம், சேகர், சுந்தரமூர்த்தி மற்றும் ராஜா முகமது உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கம்பெனியை மூடி சீல் வைத்தனர்.

மேலும் இதுபோன்று உரிய ஆவணங்கள் இன்றி செயல்படும் வாட்டர் கம்பெனிகளை சோதனை செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் கம்பெனிகள் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் செய்தனர்.

ஐஎஸ்ஐ உரிமம், உணவு பாதுகாப்பு உரிமம்  இல்லாமல் சுகாதரமற்ற முறையில் வாட்டர் கம்பெனிகள் செயல்பட்டால் 9444042322 என்ற ரகசிய வாட்ஸ் அப் எண் மூலம் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

 

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x