Published : 05 Nov 2018 05:10 PM
Last Updated : 05 Nov 2018 05:10 PM

தீபாவளித் திருநாளில் மகிழ்ச்சி நிறையட்டும்; வளம் பெருகட்டும்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து

தீபாவளி திருநாளில் தமிழக மக்கள் மனங்களில் மகிழ்ச்சி தழைக்கட்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் கே.பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: மகிழ்ச்சி என்ற ஒளியை அளிக்கும் திருநாளாக தீபாவளி விளங்குகிறது. இத்திருநாளை நாடு முழுவதும் இளையோரும், முதியோரும் ஒன்றிணைந்து கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த அருமையான சந்தர்ப்பத்தில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த திருநாள், தமிழக மக்கள் வாழ்வில் ஒளியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தட்டும்.

முதல்வர் கே.பழனிசாமி: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலத்துடன் கொண்டாடப் படும் இந்த இனிய வேளையில், மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிறையட்டும், வளம் பெருகட்டும், வாழ்வு சிறக்கட்டும் என்று வாழ்த்தி, தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: மகிழ்ச்சி பொங்கும் தீபாவளி திருநாளில், அனைவரின் இதயங்களில் அமைதியும் அளவற்ற மகிழ்ச்சியும் நிறையட்டும் என்று எனது இதயம் கனிந்த தீபா வளி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகளை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இனிய தீபாவளி நாளில் உங்கள் குடும் பங்களில் செல்வம் செழித்து, மகிழ்ச்சி பொங்கி, வருகின்ற காலங்களில் குதூகலமான ஒரு குடும்பமாக உங்கள் குடும்பம் விளங்குவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய பிரார்த்திக் கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்: இத் திருநாளில் ஏற்றப்படும் தீப ஒளி விளக்குகளால் உருவாகும் ஒளியானது எவ்வாறு இருளை அகற்றுகிறதோ, அதே போன்று மக்களின் மனங்களிலும், வாழ்விலும் ஒளிவீசி மகிழ்வோடு வாழ தமிழக மக்கள் அனைவருக் கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த் துகளை தெரிவித்துக் கொள் கிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: தீமையை அகற்றி, நன்மையை விளைவிப்பதன் அறிகுறியாக கொண்டாடப்படும் தீபாவளி திருநாளை, இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக மக்கள் கொண்டாட வேண்டும். எதிர்காலத்தில் அநீதி அழிந்து, நீதி தழைத்து, மக்களின் நல்வாழ்வு சிறக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன்: தமிழகத்துக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்க வேண்டும் என்ற மக்களின் விருப்பம் நிறைவேறிடவும் மக்கள் மனங்களில் அமைதியையும் அன்பையும் அளித்து, இச்சமுதாயம் வளத்தையும் முன்னேற்றத்தையும் அடையும் சூழலை இந்த தீபஒளித் திருநாள் நமக்கு ஏற்படுத்தித் தரட்டும் என்றும் வாழ்த்து கிறேன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன்: தீபாவளி திருநாளை கொண்டாடும் அனைவரின் வாழ்வி லும் நன்மையும், உண்மையும், மென்மையும், உன்னத மனிதநேய தன்மையும் ஒளி சிந்திட வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தீப ஒளி என்பது, தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தீப ஒளியால் நிறைந்து ஒளிமயமாகத் திகழ வேண்டும்.

ஒளிகள் சிந்தும் உவப்பான திருவிழாவான தீப ஒளித் திருநாளைக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது தீப ஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரை ஆதீனம் அருணகிரிநாத  ஞானசம்பந்த தேசிக பரமா சாரிய சுவாமிகள்: துலா மாதத்தில் தான் தீபாவளி பண்டிகை வருகிறது. துலாம் என்றால் தராசு. லாபம், நஷ்டம், இன்பம், துன்பம் ஆகியவற்றை சமமாக கருத வேண்டும். அப்போது தான் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். தீப ஒளி மிளிரும்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்: புத்தாடை கள், இனிப்புகள், பட்டாசு மத்தாப்பு களுடன் இல்லங்களிலும், உள்ளங் களிலும் அன்பின் ஒளி பரவிட, அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண் டாடிடும் தீபாவளித் திருநாளில் அனைத்து சகோதர, சகோதரிக ளுக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர்: சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில், நேரக் கட்டுப்பாட்டுடன் பட்டாசு களை வெடித்து தீபாவளித் திருநாளை கொண்டாட வேண்டும் எனக்கூறி, அனைவருக்கும் தீபா வளித் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வாறு ஆளுநர், முதல்வர் மற்றும் கட்சித் தலைவர்கள் தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும், சமத்துவ மக்கள் கழக நிறுவனர் ஏ.நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தி.தேவ நாதன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்டோரும் தீபாவளி வாழ்த் துக்களை தெரிவித்துள்ளனர்.மகிழ்ச்சி என்ற ஒளியை அளிக்கும் திருநாளாக தீபாவளி விளங்குகிறது. இத்திருநாளை நாடு முழுவதும் இளையோரும், முதியோரும் ஒன்றிணைந்து கொண்டாடி மகிழ்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x