Published : 25 Nov 2018 10:41 AM
Last Updated : 25 Nov 2018 10:41 AM

புயல் பாதித்த மாவட்டங்களில் கொசு ஒழிப்பு பணிகளுக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்க ஈக்கள், கொசுக்கள் ஒழிப்பு பணிகளுக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று வெளியிட் டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக, அதிக குப்பைகள் உள்ள இடங்களில் ஈக்கள் உற்பத்தி யாவதை தடுக்கவும், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் கொசுக் கள் உற்பத்தியாவதை தடுக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்பணிகளுக்காக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் மொத்தமாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதிர் கொசுக்களை அழிக்கும் நோக்கத்துடன் கையில் எடுத்துச்செல்லும் புகையடிப்பான்கள் மற்றும் வாகனங்களில் எடுத்து செல்லக்கூடிய புகையடிப்பான்கள் மூலம் புகை அடிக்கப்பட்டு கொசு ஒழிப்பு பணிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன. இதுவரை 5,166 மருத்துவ முகாம்களின் மூலம் 3 லட்சத்து 27 ஆயிரத்து 444 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீ கரிக்கப்பட்ட தனியார் மருத்துவ மனைகள் சார்பில் 260 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 52,161 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு 1,434 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். 312 இந்திய முறை மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இம்முகாம்களிலும் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் இதுவரை 14 லட்சத்து 45 ஆயிரத்து 572 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

500 கிராம் பிளீச்சிங் பவுடர் பொட்டலங்கள் சிறு மற்றும் குறு மருத்துவ வாகனங்கள், தொற்று நோய் தடுப்பு குழுக்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நடமாடும் மருத்துவ வாகனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்பொட்டலங்களை பொதுமக்கள் தங்கள் உபயோகத்துக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பும் வரையில் போர்க்கால அடிப்படையில் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x