Published : 25 Aug 2014 12:02 PM
Last Updated : 25 Aug 2014 12:02 PM

3 கார்களை பற்களில் கட்டி இழுத்து அசத்திய ஓட்டுநர்: போதை ஒழிப்பு விழிப்புணர்வுக்கு சாகசப் பிரச்சாரம்

உலகம் செல்கின்ற வேகத்தில் துரித உணவு கலாச்சாரத்தில் மக்கள் மூழ்கியுள்ளனர். இதனால், இருபது வயதில் உடல் உபாதைகளில் சிக்குண்டு, பலரும் அவதியிருகின்றனர். கன்னியாகுமரியில் 60 வயதிலும் உறுதி குறையாத பற்களால் ஒன்றல்ல…மூன்று கார்களை கட்டி இழுத்து போதை விழிப்புணர்வு சாகசப் பிரச்சாரம் செய்தார் ஓட்டுநர் ஒருவர்.

நாகர்கோவில் வட்டவிளை, காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் வாடகை கார் ஓட்டுநர் சந்திரன் (60). இவர் ஞாயிற்றுக் கிழமை தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாளை நாளு பேருக்கு நல்ல விசயத்தை சொல்ல எண்ணிய சந்திரன்

விழிப்புணர்வு பிரச்சாரம்

புகை, போதைப் பழகத்துக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய முடிவு செய்தார்.

ஞாயிற்றுக் கிழமை கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகில் இருந்து பல்லில் கயிறு கட்டி ஒன்றன் பின் ஒன்றாக மூன்று கார்களை 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்தார். தொடர்ந்து தரையில் படுத்து மார்பில் பலகையை வைத்து 1,700 கிலோ எடை கொண்ட காரை ஏற்றி, இறக்கச் செய்து சாகசம் செய்தார்.

இது குறித்து சந்திரன் கூறியதாவது:

புகை, போதை பழக்கத்துக்கு எதிராக தான் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம். புகையினாலும், போதையில் வாகனம் ஓட்டிய பலர் தங்கள் வாழ்வை மட்டுமல்ல, உயிரையும் இழந்துள்ளனர்.

நான் தினம் அண்ணா ஸ்டேடியத்தில் 40 யோகா செய்வேன். தினசரி 10 கி.மீ. ஓட்டப் பயிற்சி செய்வேன். அதனால் தான் 60 வயதிலும் இதை செய்ய முடிந்தது.

என் அம்மா அடித்ததில் சிறு வயதில் ஒரு பல் விழுந்து விட்டது. மீதமுள்ள 31 பல்லும் திடகாத்திரமாக இருந்ததால், இந்த சாதனையை செய்ய முடிந்தது. தீய பழக்கங்கள் இல்லாமல் இருந்தாலே பற்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x