Published : 23 Nov 2018 09:25 AM
Last Updated : 23 Nov 2018 09:25 AM

சபரிமலையின் புனிதத்தை அழிக்க முயற்சி: கேரள அரசு மீது பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சபரிமலையின் புனிதத்தை அழிக்க முயற்சிகள் நடப்பதாக கேரள அரசு மீது மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

வீடுகள், தொழிற்சாலைகளுக்கு பைப் லைன் மூலமாக சமையல் காஸ் விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவையில் இதற்கான பணிகளை மேற்கொள்ள இந்தி யன் ஆயில் கார்ப்பரேஷன் நிறு வனத்துக்கு உரிமம் அளிக்கப் பட்டுள்ளது.

நாடு முழுவதற்குமான இந்த திட்டத்தை டெல்லியில் நேற்று மாலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி, கோவை கொடிசியா அரங்கில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர், செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: சபரிமலைக்கு நேற்று (நவ.21) நான் சென்றபோது நிலக்கல் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. முன்பு நான் கண்ட காட்சிக்கும், இப்போது காணும் காட்சிக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சபரிமலையை அழிக்க வேண்டும் என்ற முயற்சி நடக்கிறது. பக்தர் களுக்கான வசதிகள் குறைக்கப் பட்டால் யாரும் வரமாட்டார்கள் என்று கருதி ஏராளமான கட்டுப்பாடு கள் மாநில அரசு சார்பில் விதிக்கப்பட்டுள்ளன.

கஜா அரசியல்

கஜா புயல் பாதிப்பை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர். பணிகள் சரியில்லையெனில் குற்றச் சாட்டுகளை முன்வையுங்கள், வாக் கைப் பயன்படுத்தி அவர்களுக்குப் பாடம் புகட்டுங்கள். நிவாரண உதவிகள் வழங்கச் செல்வோரை தடுத்தால் அது யாருக்கு நஷ்டம்?. கஜா புயல் பாதிப்பு ஏற்படுத்திய பகுதிகளை 6 மணி நேரத்துக்குள் பார்வையிட்டேன். அரசு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர், துணை முதல்வர் ஆகி யோர் ஹெலிகாப்டரில் சென்று புயல் பாதித்த பகுதிகளைப் பார்வை யிட்டுள்ளது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நான் புயல் பாதித்த பகுதிகளை நடந்து சென்றும், கார், இருசக்கர வாகனத் தில் சென்றும் பார்வையிட் டுள்ளேன். அதுபோன்று சென்று பார்ப்பதுதான் முறையாக இருக் கும் என்று கருதுகிறேன்” என்றார்.

குமரியில் இன்று முழு அடைப்பு

இதற்கிடையே சபரிமலை சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் அவமரியாதையாக நடந்து கொண் டதாகக் கூறி கேரள காவல்துறை மற்றும் அம்மாநில அரசைக் கண் டித்து, கன்னியாகுமரி மாவட்டத் தில் இன்று (23-ம் தேதி) முழு அடைப்பு நடைபெறும் என பாஜக அறிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், இருமுடி கட்டி சபரி மலைக்கு சென்றார். அவர், நேற்று முன்தினம், நிலக்கல் பகுதியில் தொண்டர்களுடன் வந்தபோது, கேரள போலீஸாரால் தடுத்து நிறுத் தப்பட்டார். அவருக்கும், போலீஸா ருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, நிலக்கலில் பணியில் இருந்த எஸ்பி யதீஷ் சந்திரா, மத்திய அமைச்சரிடம் அவதூறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x