Published : 28 Nov 2018 09:43 AM
Last Updated : 28 Nov 2018 09:43 AM

பாஜக மாவட்ட அமைப்பு செயலாளர்கள் நியமனம்

பாஜகவில் அமைப்பு ரீதியான பணிகளை மேற்கொள்ள மாவட்ட அமைப்பு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், பாஜகவில் அமைப்பு ரீதியான பணிகளை மேற்கொண்டு கட்சியை பலப்படுத்த மாவட்ட அமைப்பு செயலாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். முதற்கட்டமாக கட்சி ரீதியாக உள்ள 42 மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். தென்சென்னை மாவட்ட அமைப்பு செயலாளராக சிவசங்கர், மத்திய சென்னைக்கு குமார், வடசென்னைக்கு எஸ்.செல்வந்தன் அமைப்பு செயலாளர்களாக செயல்படுவார்கள், என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x