Published : 28 Nov 2018 09:11 AM
Last Updated : 28 Nov 2018 09:11 AM

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள்

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக மயிலாப் பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் ஒன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் - கற்ப காம்பாள் திருக்கோயில். இக்கோயி லில் சிவலிங்கத் திருமேனியோடு மேற்கு நோக்கி கபாலீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இங்கு தின மும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இது கார்த் திகை மாதம் என்பதால் கோயி லில் பக்தர்கள் வருகை அதிகரித் துள்ளது. பெண்கள் அதிக அளவில் வந்து விளக்கேற்றி வழிபாடு செய்கின்றனர். கோயிலில் அன்ன தானம், குடிநீர் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டிருப்பதும், கோயில் வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படுவதும் பக்தர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

இதுகுறித்து கேட்டபோது, கோயில் நிர்வாகிகள் கூறியதாவது:

கோயிலின் பாதுகாப்பு பணியில் 15 காவலாளிகள் ஷிப்ட் முறையில் பணியாற்றுகின்றனர். இதுபோல, 20-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கோயில் வளாகத்தை தொடர்ந்து சுத்தம் செய்துவருகின்றனர்.

தங்க நாகாபரணம்

சிறப்பு பூஜைகளின்போது, கபாலீஸ்வரருக்கு செப்பில் தங்க முலாம் பூசிய நாகாபரணம் சார்த் தப்பட்டு வந்தது. இந்த நிலையில், கோயில் தக்கார் விஜயகுமார் ரெட்டி 9 கிலோ தங்கத்திலான நாகாபரணத்தை கடந்த ஆண்டு கோயிலுக்கு வழங்கினார். இதுதவிர, கற்பகாம்பாளுக்கு தங்கப் பாவாடை, வைர கிரீடம் உள் ளிட்டவற்றையும் வழங்கியுள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.25 லட்சம் செலவில் ராஜகோபுரத்தை சீரமைத்து, புதிதாக வர்ணம் பூசியுள்ளார்.

இதுதவிர, கர்ப்பகிரகம் மற்றும் சுவாமி சன்னதிகளில் மஞ்சள், சந்தனம், கர்ப்பூரம் தெளிக்கப் பட்டு, பூச்சிகள் வருவது தடுக்கப் பட்டு வருகிறது. எலிகள் வரு வதை தடுக்கும் பணிகளும் மேற் கொள்ளப்படுகின்றன. இதற்காக மாதம்தோறும் ரூ.3 லட்சம் செலவு செய்துவருகிறார்.

தற்போது, கார்த்திகை மாதம் என்பதால் பெண்கள் அதிக அளவில் கோயிலுக்கு வந்து விளக்கேற்றி வழிபடுகின்றனர். பெண்கள் விளக்கேற்றும் இடங் களில் பாதுகாப்பு கருதி, கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர். அருகில், தீயணைப்புக் கருவி களும் தயாராக வைக்கப்பட்டுள் ளன. விளக்குகளை பாதுகாப்பாக கொண்டுசெல்வதற்கான பெட்டி களையும் தக்கார் வழங்கியுள்ளார்.

அன்னதானம், சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பக்தர்களுக்கு கிடைக்கும் வகையில் கோயில் இணை ஆணையர் காவேரி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கார்த்திகை சோமவாரத்தை (திங்கள்கிழமை) முன்னிட்டு, கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 19, 26 தேதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. டிசம்பர் 3, 10 தேதி களில் கபாலீஸ்வரருக்கு 108 சங்கா பிஷேகமும், 5-வது வாரமான டிசம் பர் 17-ம் தேதி 1008 சங்காபிஷேக மும் நடத்தப்பட உள்ளது. இதில் அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், கோயி லில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x