Published : 20 Nov 2018 10:18 AM
Last Updated : 20 Nov 2018 10:18 AM

மு.க.ஸ்டாலினுடன் இன்று சுதாகர் ரெட்டி சந்திப்பு: கூட்டணி குறித்து முடிவாகும் வாய்ப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் அகில இந்தியப் பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி இன்று சந்தித்துப் பேசுகிறார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் நடைபெறும் இந்தச் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனும் பங்கேற்க உள்ளனர்.

வரும் 2019 மக்களவைத் தேர்தலில் மோடி அரசை வீழ்த்த தேசிய அளவில் மெகா கூட்டணி அமைக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சித்து வருகிறார். இதற்காக அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் திமுக அணியில் உள்ளன. மக்களவைத் தேர்தல், 20 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடந்த வாரம் மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களும் இன்று ஸ்டாலினை சந்திக்கின்றனர். மக்களவைத் தேர்தல் கூட்டணி, 20 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அப்போது ஸ்டாலினுடன் பேச்சு நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x