Last Updated : 21 Nov, 2018 08:29 AM

 

Published : 21 Nov 2018 08:29 AM
Last Updated : 21 Nov 2018 08:29 AM

புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாகை, தஞ்சை மீனவர்களின் வாழ்வாதாரம் மீட்டெடுக்கப்படுமா?

கஜா புயல் காரணமாக நாகப் பட்டினம், தஞ்சாவூர் மாவட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடல் அலைகள் உயரமாக எழும்பியதால் கடலோரப் பகுதிகளில் பல இடங்களில் கடல் நீர் உட்புகுந்தது. இதனால் வீடுகள் பாதிக்கப்பட்டன. கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு கள் அடித்துச் செல்லப்பட்டு சாலைகளிலும், வீடுகளுக்கிடை யேயும் சேதமடைந்து சிதறிக் கிடந்தன.

இதுகுறித்து நாகப்பட்டினம் கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த இந்திய தேசிய மீனவர் சங்கத் தலைவர் ஆர்.எம்.பி.ராஜேந்திரன் நாட்டார் கூறியது: நாகப்பட்டினத்தில் நாகூர், சாமந்தான்பேட்டை, நம்பியார் நகர், கீச்சாங்குப்பம், அக்கரைப் பேட்டை, கல்லார், வேளாங் கண்ணி, செருதூர், காமேஸ்வரம், வடக்கு விழுந்தமாவடி, விழுந்த மாவடி, வானவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, மணியன்தீவு, கோடியக்கரை, கோடியக்காடு உள் ளிட்ட அனைத்துப் பகுதிகளும் புய லால் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளன.

சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் உடைந்து சேத மாகியும், காணாமலும் போயுள் ளன. பல விசைப் படகுகள் முற் றிலும் சேதமடைந்துள்ளன. எல்லாப் படகுகளுமே என்ஜின் பழுது, கருவி கள் காணாமல் போயிருப்பது, வலைகள் தூக்கி வீசப்பட்டது என ஏதாவது ஒருவகையில் சேதத்தை சந்தித்திருக்கின்றன.

கடல் நீர் உட்புகுந்ததால் எல்லா வீடுகளுமே ஏதோ ஒரு வகை யில் மிகப்பெரும் சேதத்தை அடைந் திருக்கின்றன. குடிசை வீடுகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு எந்த நிவாரணம் அறிவித்தாலும் எல்லோருக்கும் சராசரியாக ஒரே மாதிரி அறிவிக்க வேண்டும்.

சுனாமி பேரிடர் நிதி மூலம் கடற்கரையோரத்தில் கட்டப்பட்ட 18 மீட்டர் அகலம், 12 மீட்டர் உயரம் கொண்ட அலை தடுப்புச்சுவரை, சுமார் 15 ஆண்டுகளாக துறைமுகத் துறையும், மீன்வளத் துறையும் முறையாக பராமரிக்கவில்லை. இந்தச் சுவர் முறையாகப் பராமரிக் கப்பட்டிருந்தால் சிறிய அளவில் பாதிப்புகளை தடுத்திருக்கலாம். இதை கருத்தில்கொண்டு பேரிடர் மீட்புத் துறை மூலம் அலை தடுப்புச்சுவரை உயர்த்தி அமைக்க வேண்டும்.

சுனாமிக்குப் பின்னர் கடலோரப் பகுதிகளில் உருவாக்கப்பட்ட இயற்கை அரணை வனத்துறை முறையாகப் பராமரித்திருந்தால் ஓரளவு பாதிப்புகளை தடுத்திருக்க முடியும். அதனால் இயற்கை அரண் உருவாக்கி தொடர்ந்து முறையாக பராமரிக்க வேண்டும். வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் விவசாயிகளையும், மீனவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்றார்.

தஞ்சாவூர் மீனவர்கள் கண்ணீர்

இதேபோன்று, தஞ்சை மாவட் டத்தில் உள்ள அதிராம்பட்டினம் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும் சேதத்தை சந்தித்தது. இங்கு, கடல் அலைகள் பெரும் உயரத்துக்கு எழும்பி குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது. தற்போது கடல் நீர் வடிந்தபோதும் வீடுகள் முழுவதும் சேறு நிறைந்து காணப்படுகிறது. இதனால் அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவ கிராம மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

அதிராம்பட்டினம் பகுதியில் கடற்கரையில் இருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில்தான் குடியிருப்புகள் உள்ளன. ஆனால், புயல் காற்று 111 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதால், கடல் அலைகள் 10 மீட்டர் உயரத்துக்கு எழும்பி கடல் நீர் ஊருக்குள் புகுந்துவிட்டது. சுனாமியின்போது கூட இவ்வளவு பாதிப்புகள் இல்லை.

கடல் நீர் ஊருக்குள் வரும் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. கரையிலும், படகு வழித்தடத்திலும் நிறுத்தப்பட்டிருந்த படகுகள், வலைகள் கடுமையாகச் சேதமடைந் துள்ளன. சேதமடைந்த படகுகளை சீரமைத்து மீன்பிடி தொழிலில் மீண் டும் ஈடுபடுவதற்கு நீண்ட காலம் ஆகலாம். எங்களின் வாழ்வாதாரம் அழிந்துவிட்டது என கண்ணீருடன் கூறுகின்றனர் மீனவர்கள்.

இங்கு, வீடுகளில் தேங்கியுள்ள சேறு காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், இப்பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் சீரடையாததால் பொதுமக்கள், புயல் நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் உட னடித் தேவைகளை பூர்த்தி செய்வ துடன், அவர்களின் நிரந்தரமான வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதே தற்போது அரசின் முன்பு உள்ள சவாலான விஷயமாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x