Published : 13 Nov 2018 10:03 AM
Last Updated : 13 Nov 2018 10:03 AM

ஷெனாய் நகர் திருவிக பூங்காவில் 5,000 மரக்கன்றுகளுடன் செயற்கை காடு வளர்க்கும் மெட்ரோ ரயில் நிறுவனம்

ஷெனாய் நகர் திருவிக பூங்காவில் மியோவாக்கி முறையில் 5,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, செயற்கை காட்டை மெட்ரோ ரயில் நிறுவனம் உருவாக்கி வரு கிறது.

ஜப்பானிய தொழில்நுட்பமான மியோவாக்கி முறையில் காடு களை உருவாக்கும் முறை, தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த முறையால் குறைந்த இடத்தில் காடுகளை உருவாக்க முடியும்.

குப்பைகளை வைத்தே குட்டி வனத்தை உருவாக்கும் அற்புத மான தத்துவம். ஆழமான குழிகளை வெட்டி, அதில் குப்பைகளைப் போட்டு, நெருக்கமாகச் செடிகளை நடும் முறைக்குப் பெயர்தான், மியாவாக்கி.

மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் இந்த முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.

சுரங்கப்பாதையில் உள்ள ஷெனாய் நகர் மெட்ரா ரயில் நிலை யத்தின் மேற்பகுதியில் உள்ள திருவிக பூங்காவில் அரசமரம், வேம்பு, மாமரம், புங்கை, மலைவேம்பு, பூவரசம், நெல்லி, தேக்கு உட்பட 30-க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த 5,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இந்தப் பூங்காவை மேம்படுத்தும் வகையில் இந்த செயற்கை காடு உருவாக்கப்படுகிறது. இதேபோல், குழந்தைகள் விளையாட்டு திடல், யோகா பயிற்சி மையம், படிப்பதற் கான இடவசதி, தியான மையம் உட்பட பல்வேறு வசதிகளுடன் திருவிக பூங்கா மேம்படுத்தப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x