Last Updated : 27 Nov, 2018 09:00 AM

 

Published : 27 Nov 2018 09:00 AM
Last Updated : 27 Nov 2018 09:00 AM

10 நாட்களுக்கு மேலாகியும் இயல்பு நிலை திரும்பவில்லை: வீடு, உணவின்றி பரிதவிக்கும் சுக்கிரன்குண்டு கிராம மக்கள் - உதவிக்காக காத்திருக்கும் பரிதாபம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடி அருகே கஜா புயலால் பாதிக் கப்பட்ட நிலையில் வீடு, உண வின்றி ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஒட்டுமொத்த மாக பரிதவித்து வருகின்றனர்.

எல்.என்.புரம் (அணவயல்) ஊராட்சி சுக்கிரன்குண்டு கிராமத் தில் 150-க்கும் மேற்பட்டோர் வசிக் கின்றனர். அனைவருமே கூலித் தொழிலாளர்கள். இங்கு பள்ளிக் கல்வியைக் கடந்தவர்கள் எவரு மில்லை. இங்குள்ள சுமார் 60 வீடுக ளில் சில வீடுகளே அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டவை. ஏனைய வீடு கள் அனைத்தும் சுவரற்ற குடிசை கள்தான். அரசால் கட்டித்தரப்பட்ட வீடுகள் மற்றும் உள்ள குடிசைகள் அனைத்துமே கஜா புயலால் கடும் சேதம் அடைந்துள்ளன.

தாழ்வான பகுதி என்பதால் புய லுக்குப் பிறகு ஒரு வாரம் வரை சுமார் 5 அடி உயரத்துக்கு குளம் போல இப்பகுதியைத் தண்ணீர் சூழ்ந்திருந்தது. இங்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருந்தாலும் மின்சாரம் விநியோகிக்கப்படாத தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது. வீடுகளில் இருந்த ரேஷன் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட் கள் அனைத்தும் தண்ணீரில் அடித் துச் செல்லப்பட்டுவிட்டதால் அடுத்த வேளை உணவுக்கும் மாற்று உடைக்கும் வழியின்றி மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர்.

கழிவுநீருடன் தேங்கியுள்ள குளத்து நீரையே கிராம மக்கள் குடிநீராகப் பயன்படுத்துகின்றனர். ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ள தால் அந்த இடங்கள் அனைத்துமே கொசு உற்பத்திக்கான காரணி களாகிவிட்டன. பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்படாததால், குழந்தைகள் உட்பட அதிகமானோர் காய்ச்ச லால் பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள் ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஒரு சிலர் மட்டும் இலவசமாகப் பெற்ற பிளாஸ்டிக் தார்ப்பாய், பயன்படுத்தப்பட்ட பிளக்ஸ் பேனர் களைக் கொண்டு குடிசைகளை மூடி வைத்துள்ளனர்.

எனவே, மாவட்ட அதிகாரிகள் ஒரு முறையேனும் இப்பகுதிக்கு வந்து பார்வையிட்டு அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இந்தக் கிராமத் தினர் சிலர் கூறியது: புயலுக் குப் பிறகு ஒரு முறை மட்டும் ஜெனரேட்டர் மூலம் மோட்டார் இயக்கப்பட்டு குடிநீர் விநியோகிக் கப்பட்டது. அந்தத் தண்ணீரை பிடித்து வைக்கக்கூட எங்களிடம் போதிய குடங்கள் இல்லை. வீடுகள் அனைத்தும் முழுமையாக சேதம் அடைந்துவிட்டன. உணவுப் பொருட்கள், துணிமணிகள், ரேஷன் கார்டுகள், பாய், போர்வை, பாத்திரங்கள் என அனைத்துமே தண்ணீரில் அடித்துச் செல்லப் பட்டுவிட்டன.

வயிறார சாப்பிட்டு 10 நாட்கள்

எங்களுக்காக முகாம் ஏற்பாடு செய்து, அங்கு தங்க வைத்து உணவ ளிக்கக் கூட யாரும் இல்லை. வயி றார சாப்பிட்டு 10 நாட்களாகிறது. மாற்று உடை இல்லை. கூலி வேலை யும் கிடைக்காததால் யாரேனும் உணவுப் பொருட்களை கொண்டு வரமாட்டார்களா? என்ற ஏக்கத் திலேயே பொழுதைக் கழிக்க வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. எங்க ளுக்கு ஏற்பட்ட இதுபோன்ற நிலை எங்கள் எதிரிக்கு கூட ஏற்பட்டுவிடக் கூடாது என்று கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x