Published : 28 Nov 2018 09:23 AM
Last Updated : 28 Nov 2018 09:23 AM

புயல் பாதிப்பின் தீவிரம் நேரில் பார்த்தால்தான் தெரியும்: சீரமைப்புக்கு அனைவரும் உதவ வேண்டும் - நடிகர் ராகவா லாரன்ஸ் வலியுறுத்தல்

நாகை மாவட்டம் கீழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளப் பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை புயலால் மிகவும் பாதிக் கப்பட்டுள்ளன. இதுகுறித்து தகவல றிந்த திரைப்பட நடிகரும், இயக்கு நருமான ராகவா லாரன்ஸ் நேற்று நாகை வந்தார்.

ராகவா லாரன்சுடன் வந்திருந்த அவரது நாட்டியப் பள்ளி மாணவர் கள, கீழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பணிகளை பார்வை யிட்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியது: கஜா புயல் பாதிப்பு குறித்து பத்திரிகைகளில் படித்தது, தொலைக்காட்சியில் பார்த்ததை விட நேரில் பார்க்கும்போதுதான் பாதிப்பின் தீவிரத்தை முழுமையாக உணர முடிகிறது.

கீழையூர் பள்ளியில் பெண்கள் கழிவறை பழுதடைந்துள்ளது. நாம் பணம் கொடுத்தால் போதாது. நாம் அருகில் இருந்தால் வேலை நன்றாக நடக்கும் என்று நினைத்து புறப்பட்டு வந்து விட்டேன். காஞ் சனா திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்ததற்கு குழந்தைகளும் முக்கிய காரணம் என்பதால்தான், பதிலுக்கு குழந்தைகளுக்கு நாம் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்து உதவிவருகிறேன்.

ரூ.25 ஆயிரம் கொடுத்தால் நம் மால் ஒரு குடிசை வீட்டை சீரமைத்து தந்து விட முடியும். மரம் அறுக்கும் ரம்பம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.11 ஆயிரம் வரை கிடைக்கிறது. ஒரு கிராமத்துக்கு ஒரு ரம்பமாவது வாங்கித்தர வேண்டும். தயவு செய்து அனைவரும் உதவி செய்யுங்கள் என்றார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதா உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x