Published : 21 Nov 2018 10:04 AM
Last Updated : 21 Nov 2018 10:04 AM

ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

மிலாது நபியை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல் வர் கே.பழனிசாமி மற்றும் பல் வேறு அரசியல் கட்சித் தலைவர் கள் வாழ்த்துகளைத் தெரிவித் துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித்: இறைத்தூதர் முகமது நபிகள் நாயகத்தின் பிறந்த நாளானது மிலாது நபியாகக் கொண்டாடப்படுகிறது. மிலாது நபி திருநாளில் என்னுடைய வாழ்த்துகளை அனைத்து இஸ் லாமிய சகோதர சகோதரிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நபிகள் நாயகத்தின் கொள்கை களை நம்வாழ்வில் கடைப்பிடிப் பதன் மூலம் அன்பு, சகிப்புத் தன்மை ஆகிய குணநலன்களை முழு சமுதாயத்துக்கும் சென்ற டையச் செய்வோம்.

முதல்வர் கே.பழனிசாமி: பிற ருக்கு உதவக்கூடிய ஒரு சந்தர்ப் பத்தையும் அலட்சியப்படுத்தாதே, மற்றோருடன் அன்போடும் ஆதரவோடும் பழகு, உன்னிடம் இருப்பது தண்ணீரேயானாலும் அத்தண்ணீர் தேவைப்படுவோர்க்கு அதை அளித்து மகிழ்ந்திடு என்பது போன்ற இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் அருட் போதனைகளை மக்கள் பின்பற்றி வாழ்ந்தால் உலகில் அன்பும், அறமும், அமைதியும் தழைத்தோங்கும். நபிகள் நாயகம் பிறந்த இப்புனித நாளில், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு மிலாது நபி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்: இஸ்லாமிய மக்களின் திருமறையான ‘திருக்குர்-ஆன்’ இறைவனால் நபிகள் நாயகம் மூலம் மக்கள் அனைவருக்கும் அருளப்பட்டது. நபிகள் நாயகம் பிறந்த நாளான இன்று மக்கள் அனைவரும் மத நல்லிணக்கம், சாந்தி, சமாதானம், பொறுமை, அன்பு, மன்னிப்பு கொடை ஆகிய நற்பண்புகளுடன் மகிழ்வுற்று வாழ வேண்டும்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி: பொறுமை, சகிப்புத்தன்மை, சமாதானம், சகோதரத்துவம் போன்றவற்றை கடைப்பிடித்து உலகில் அமைதி வளம், நல்லிணக்கம், மகிழ்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்த அவர் பிறந்த நாளில் நாம் உறுதியேற்போம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: அன்பு, அமைதி, சமய நல்லி ணக்கம் ஆகியவற்றை உலகுக்கு போதிக்கவே அவதாரம் எடுத்தவர் நபிகள் நாயகம். அவர் கற்பித்த போதனைகளை நம் வாழ்வில் கடைபிடிக்க அவரது பிறந்தநாளில் உறுதியேற்போம்.

அமமுக துணை பொதுச்செய லாளர் டிடிவி தினகரன்: உலகம் போற்றும் ஒப்பற்ற கருத்துகளை போதித்த இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த நாளை மகிழ்ச்சி யுடன் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிக ளுக்கும் இனிய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நபி கள் நாயகத்தின் போதனைகளை கடைப்பிடிப்போம்.

சமக தலைவர் சரத்குமார்: மனிதநேயம், சமத்துவம், சகோதரத்துவம், கருணை, கொடை ஆகிய நற்பண்புகள் அனைவரது உள்ளங்களிலும் மலர்ந்திட, நபிகளாரின் சீரிய கொள்கைகளை கடைப்பிடித்திட உறுதியேற்போம்.

மேலும், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், சமத்துவ மக்கள் கழக நிறுவனர் ஏ.நாராயணன், இந்திய ஹஜ் சங்கத் தலைவர் அபுபக்கர் ஆகியோரும் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x