Published : 29 Oct 2018 09:24 AM
Last Updated : 29 Oct 2018 09:24 AM

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் ஒரு லட்சம் ஸ்டீல் இருக்கைகள் அமைக்க திட்டம்: தெற்கு ரயில்வேக்கு 7,000 இருக்கைகள் ஒதுக்கீடு

நாடு முழுவதும் உள்ள  ரயில் நிலையங்களில் அடுத்த மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் ஸ்டீல் இருக்கைகளை அமைக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இதில், தெற்கு ரயில்வேக்கு மட்டும் 7 ஆயிரம் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் 7 முக்கிய நகரங் களில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  இவற்

றில்  தினமும் சுமார் 1 கோடியே 23 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.  சென்னையில் வேளச்சேரி, தாம்பரம், செங்கல்பட்டு, அரக் கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் நூற்றுக்கணக்கான மின்சார ரயில்களில் தினமும் சுமார் 10 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். ஆனால், புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் போதிய அளவில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றன.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் ஒரு லட்சம் ஸ்டீல் இருக்கைகள் அமைக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. மொத்தமுள்ள 17 ரயில்வே மண்டலங்கள்,  தெற்கு, வடக்கு, மத்திய, கிழக்கு, மேற்கு என 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஸ்டீல் இருக்கைகள் வழங்கப்படவுள்ளன. 10 பேர் மற்றும் 4 பேர் அமரும் வகையில் இரண்டு வகையான இருக்கைகள் தயாரிக்கப்படவுள்ளன. ஒவ்வொரு  இருக்கையின் விலை ரூ.12 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் வரையில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

‘‘நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். வாய்ப்புள்ள சில இடங்களில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ரயில்வே நிலையங்களில்  பல்வேறு அடிப்படை வசதி களை  மேம்படுத்தி வருகிறோம்.

ரயில் நிலையங்களில் இருக்கை வசதி என்பது அத்தி யாவசியமானதாக இருக்கிறது. எனவே, நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் ஒரு லட்சம் ஸ்டீல் இருக்கைகள் அமைக்க வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டரையும் வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.

இதில், நிறுவனத்தை  தேர்வு செய்து இருக்கைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும். புதிய இருக்கைகள் வர, வர அந்தந்த ரயில்வே மண்டலத்துக்கு வழங்கப்பட்டு ரயில் நிலையங் களில் அமைக்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் ஸ்டீல் இருக்கைகளை அமைக்க வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டத்துக்கு 2,500, மதுரை - 1000, பாலக்காடு – 1000, திருச்சி – 1000, திருவனந்தபுரம் – 1,500 என 5 கோட்டங்களிலும் மொத்தம் 7,000 இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x