Published : 10 Oct 2018 08:17 AM
Last Updated : 10 Oct 2018 08:17 AM

விமானத்தின் உதவியால் மீனவர்கள் 19 பேர் மீட்பு: குமரியில் 18 படகுகள் கரை சேரவில்லை

தூத்துக்குடியில் இருந்து 2 விசைப் படகுகளில் கடலுக்குச் சென்று கடந்த ஒரு வாரமாக எந்த தகவ லும் இல்லாமல் இருந்த 19 மீனவர் களையும் கடலோர காவல் படை யினர் நேற்று மீட்டனர். கன்னியா குமரியில் 18 விசைப்படகுகளில் சென்ற 210 மீனவர்கள் இன்னும் கரை சேர வேண்டியுள்ளது.

தூத்துக்குடி தருவைகுளத் தைச் சேர்ந்த பவுல்ராஜ் என்ப வரின் விசைப்படகில் 9 பேர், ரவி என்பவரின் விசைப்படகில் 10 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் கடந்த 1-ம் தேதி கடலுக்கு சென்றனர். புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின், இந்த 2 படகுகள் தவிர, மற்ற படகுகள் கரை திரும்பின.

இவ்விரு படகுகளையும் மீட்க கடந்த 4 நாட்களாக கடலோர காவல் படையினர், டோனியர் விமானம் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்ட னர். நேற்று காலை இவ்விரு படகுகளும் கன்னியாகுமரியில் இருந்து தெற்கே 105 கடல் மைல் தொலைவில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

கடலோர காவல் படை கமாண் டர் வெங்கடேஷ் கூறும்போது, “இவ்விரு படகுகளும் இருக்கும் பகுதிக்கு ‘அபிராஜ்’ கப்பல் சென்று, 19 மீனவர்களும் மீட்கப்பட்டுள் ளனர். மீனவர்கள் நலமாக உள்ள னர். அவர்கள் இன்று (அக்.10) மாலை தூத்துக்குடி வந்து சேர்வார்கள்” என்றார்.

குமரி மீனவர்கள் 210 பேர் மாயம்

குமரியில் வரும் 12-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், 400-க்கும் மேற்பட்டோர் புயல் குறித்த தகவல் கிடைக்காமல் கடலில் இருப்பதாக தகவல் பரவியது. அவர்களைத் தொடர்பு கொள்ள பல்வேறு வித முயற்சிகள் எடுக்கப்பட்டன. நேற்று காலை நிலவரப்படி, 18 படகுகளில் உள்ள 210 பேரைத் தவிர மற்றவர்கள் லட்சத்தீவு, கோவா, குஜராத், மகாராஷ்டிரா, கேரளா போன்ற கடல் பகுதிகளில் கரைசேர்ந்தனர். கடந்த 5-ம் தேதி கோவாவில் 13 படகுகளில் 125 பேரும், லட்சத்தீவில் கடமன் பகுதியில் 9 படகுகளில் 110 பேரும் கரை சேர்ந்துள்ளனர்.

கோவாவில் தவிக்கும், குமரி மாவட்டம் சின்னத்துறையை சேர்ந்த ஆன்றோ, பூத்துறையைச் சேர்ந்த ராஜேஷ் ஆகியோரும், லட்சத்தீவில் கடமன் பகுதியில் கரை ஒதுங்கிய சின்னத்துறை யைச் சேர்ந்த ஷாபு என்பவ ரும் செல்போன் மூலம் கூறும் போது, ``உணவு ஏதுமின்றி தவிப்ப தாகவும், தாங்கள் ஊர் திரும்ப அரசு உதவி செய்ய வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x