Published : 23 Oct 2018 09:53 AM
Last Updated : 23 Oct 2018 09:53 AM

செங்கம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு என புகார்: பள்ளி ஆசிரியர் மீது கிராம மக்கள் தாக்குதல்

செங்கம் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி, வகுப் பறையில் இருந்த ஆசிரியரை கிராம மக்கள் தாக்கிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் கணித ஆசிரி யராக பணியாற்றுபவர் கண்ணன். இவர், அதே பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவிக்கு, கடந்த 15-ம் தேதி நடைபெற்ற சிறப்பு வகுப்பில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மாணவி கடந்த சில நாட் களாக பள்ளிக்கு செல்லவில்லை.

மகளின் செயலால் சந்தேக மடைந்த பெற்றோர், அவரிடம் விசாரித்தனர். அப்போது, கணித ஆசிரியர் கண்ணன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி அழுதுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுசம்பந்தமாக பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தகுமார் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில், நேற்று காலை மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இளைஞர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பள்ளிக்கு சென்றனர். அப்போது, வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் கண்ணன் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். மேலும் அவர் மீது, வகுப்பறையில் இருந்த நாற்காலியை தூக்கி அடித்தனர். அதில் அவரது தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து பாய்ச்சல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.

விசாரணை அறிக்கை

இதற்கிடையே, பாலியல் குற்றச்சாட்டு குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் மாவட்ட கல்வி அலுவலர் கந்தசாமி, வட்டாட் சியர் (பொறுப்பு) சங்கரன் ஆகி யோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணை அறிக்கை முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், 30-க்கும் மேற்பட்டோர் திரண்டு வகுப்பறையில் இருந்த ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தினர். நாற்காலியை தூக்கி அடித்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x