Published : 20 Oct 2018 11:15 AM
Last Updated : 20 Oct 2018 11:15 AM

உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது பேருந்து மோதி 4 பேர் உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை அருகே சிமெண்ட் கலவை ஏற்றிச் சென்ற லாரி மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதி விபத்துக்குள் ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.

சென்னையிலிருந்து மதுரை நோக்கி நேற்று முன்தினம் இரவு 40 பயணிகளுடன் புறப்பட்ட தனியார் சொகுசு பேருந்து, நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புதிய இடங்கல் என்ற இடத்தில் வந்தபோது, முன்னால் சென்ற சிமெண்ட் கலவை ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது மோதி விபத் துக்குள்ளானது. இதில் இரு வாக னங்களும் திடீரென தீப்பற்றின. இதில் பேருந்து ஓட்டுநர் மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த அலெக்சாண்டர் (59), பேருந்தின் மற்றொரு ஓட்டுநர் மதுரை பராசக்தி நகரைச் சேர்ந்த சக்திவேல் (58), பேருந்தில் பயணித்த அருப் புக்கோட்டையைச் சேர்ந்த மோனிஷா (25) மற்றும் டேங்கர் லாரி ஓட்டுநர் மதுரையைச் சேர்ந்த முருகன் (55) ஆகியோர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதற்கிடையே பயணிகள், பேருந்தின் பின்பகுதியில் உள்ள அவசர கதவை திறந்துகொண்டு வெளியேறினர். அப்போது மது ரையை சேர்ந்த கேசவன் (30), தியாகு (28), பழங்காநத்தத்தை சேர்ந்த வைதேகி (51), செங்கல் பட்டைச் சேர்ந்த செல்வநாயகி (60), சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த தமிழ்செல்வன் (29) உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தகவலறிந்த உளுந்தூர் பேட்டை காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x