Published : 21 Oct 2018 08:30 AM
Last Updated : 21 Oct 2018 08:30 AM

சிலைகளின் தொன்மை குறித்து தஞ்சாவூர் பெரிய கோயிலில் அதிகாரிகள் மீண்டும் ஆய்வு: நவீன கருவிகளின் உதவியுடன் சோதனை

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீ ஸார் மற்றும் இந்திய தொல்லியல் துறையினர் இணைந்து சிலைக ளின் தொன்மை குறித்து நேற்று மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து மாயமான மாமன்னன் ராஜராஜ சோழன், பட்டத்தரசி உலகமாதேவி ஐம்பொன் சிலைகள் குஜராத்திலிருந்து மீட்டு கொண்டு வரப்பட்டன. மேலும், இங்கிருந்த பழமையான நடராஜர் சிலை உள்ளிட்ட 10 சிலைகள் களவு போனதாகவும், அவற்றுக்குப் பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து, கோயிலில் உள்ள 41 ஐம்பொன் சிலை களையும் ஆய்வு செய்வதென தொல்லியல் துறை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் முடிவு செய்தனர்.

இதையடுத்து, கடந்த மார்ச் 12-ம் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் கோயிலில் உள்ள சிலைகளை பார்வையிட்டனர். அப்போது, பல்வேறு சிலைகள் மாற்றப்பட்டு இருக்கலாம் என சந்தேகிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து 6 மாதம் கழித்து, கடந்த செப்.29-ம் தேதி ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார், சிலைகளை ஆய்வு செய்தனர். அப்போது சில சிலைகளில் தற்கால தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித் தனர்.

இதையடுத்து, இந்திய தொல்லி யல் துறையுடன் இணைந்து சிலை கடத்தல் தடுப்புப் போலீஸார், கடந்த 11-ம் தேதி கோயிலில் உள்ள 41 சிலைகளின் பழமைத் தன்மை, கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் உள்ளிட்ட பழங்கால ஆவணங்களில் உள்ளபடி சிலைகளின் அளவுகள், அமைப்பு ஆகியவை குறித்து நுணுக்கமாக ஆய்வு செய்தனர்.

4-வது முறையாக

இதையடுத்து, சிலைகள் மாற்றப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், 4-வது முறையாக நேற்று தொல்லியல் துறை தென் மண்டல இயக்குநர் நம்பிராஜன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஎஸ்பி ராஜாராமன் தலைமையிலான குழுவினர் சிலைகளின் தொன்மை குறித்து நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கருவிகளின் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். காலை 8.30 மணிக்கு கோயிலுக்கு வந்த அவர்கள் மதியம் 2 மணி வரை ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் உள்ள 20 சிலைகளையும் ஆய்வு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x