Published : 20 Oct 2018 11:12 AM
Last Updated : 20 Oct 2018 11:12 AM

சென்னையில் மீட்கப்பட்ட 7 புதிய வெளிநாட்டு பறவையினங்கள்: வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு

சென்னையில் பல்வேறு இடங் களில் இருந்து மீட்கப்பட்ட 7 புதிய வெளிநாட்டு பறவையினங்களை வண்டலூர் பூங்காவில் பொது மக்கள் பார்வையிடலாம்.

சென்னையில் பல்வேறு இடங் களில் சட்ட விதிகளை மீறி வெளிநாட்டு பறவைகள் விற்கப் பட்டு வருகின்றன. இணையதளம் மூலமாகவும் விற்பனை நடை பெறுகிறது. இதைத் தடுக்கும் பணியில் வனத்துறையின் வன உயிரின பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் நடவடிக்கை யால் பல்வேறு பறவையினங்கள் வியாபாரிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அவை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னையில் பல்வேறு நபர்களிடம் இருந்து ஸ்கார்லெட் பஞ்சவர்ண கிளி, கேட்டிலைனா பஞ்சவர்ண கிளி, ஹர்லிகுயின் பஞ்சவர்ண கிளி, சீவர் பஞ்சவர்ண கிளி, டஸ்கி பாய்னஸ், ரூபெல்ஸ் கிளி, அமேசான் ஆரஞ்சு இறகு கிளி ஆகிய 7 வகையான புதிய பறவையினங்கள் மீட்கப் பட்டுள்ளன.

அவை கால்நடை மருத்துவ மனையில் தனிமைப்படுத்தப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அவை நல்ல ஆரோக்கியமான நிலைக்கு வந்தபின் தற்போது, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இப்பறவைகள் பொது வாக மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் காணப்படும்.

இந்த பறவைகளின் வண்ண மிகு நிறங்கள், தனித்துவமான குரல் மூலம் அதிக பார்வையாளர்களை ஈர்க்கின்றன. இப்பூங்காவில் ஏற்கெனவே 28 வெளிநாட்டு பறவை இனங்கள், 61 உள்நாட்டு பறவையினங்கள் என மொத்தம் 89 வகையான பறவை இனங்களைச் சேர்ந்த 1,604 பறவைகள் உள்ளன.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x