Published : 22 Oct 2018 08:25 AM
Last Updated : 22 Oct 2018 08:25 AM

மாவட்ட செயலர்கள், தொகுதி பொறுப்பாளர்களுடன் ஸ்டாலின் 25-ம் தேதி முக்கிய ஆலோசனை

திமுக மாவட்டச் செயலாளர்கள், மக்களவைத் தொகுதி பொறுப் பாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 25-ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

திமுக மாவட்டச் செயலாளர் கள், மக்களவைத் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 25-ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங் கில் நடக்கும். மாவட்டச் செயலா ளர்கள், மக்களவைத் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலை எதிர் கொள்ள திமுக தயாராகி வருகிறது. கடந்த 18-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்ததிமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை, நிதி வசூல், தேர்தல் பணிகள், பிரச்சார வியூகம் எனமக்களவைத் தேர்தல் பணிகள் குறித்து 3 மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, புதுச்சேரி உட்பட 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் தலா 2 பேர் வீதம் 80 பொறுப்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து மக்கள வைத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக மாவட்டச் செயலாளர்கள், மக்களவைத் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். திமுகவின் கிளைச் செயலாளர்கள் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை யிலான நிர்வாகிகளுடன் கடந்த ஆண்டில் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 20 பேர் கொண்ட குழுக்களை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதன்படி 20 பேர் கொண்ட வாக்குச்சாவடி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வீடு வீடாக பிரச்சாரம்

இந்தக் குழுக்களை ஒருங்கி ணைத்து 40 தொகுதிகளிலும் திமுக வாக்கு வங்கியை உறுதிப்படுத்துவது, 18 முதல் 25 வயதுக்கு உட்பட்ட முதல் தலைமுறைவாக்காளர்களை ஈர்ப்பது, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் எனதிமுக நிர்வாகி ஒருவர் தெரி வித்தார்.

மக்களவைத் தொகுதிக்கென நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பா ளர்கள், அந்தந்த மாவட்டச் செயலாளர்களுடன் இணைந்து என்னென்ன பணிகளைச் செய்யவேண்டும் என்பதற்கான திட்டமிடலும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x