Published : 11 Oct 2018 09:27 AM
Last Updated : 11 Oct 2018 09:27 AM

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஒடிசா சிறுமியின் ரத்தநாள கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்  முகத்தை சீரமைத்து டாக்டர்கள் சாதனை

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் ஒடிசா சிறுமியின் பிறவி ரத்தநாள கட்டி அகற்றப்பட்டு முகம் சீரமைக்கப்பட்டது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி சிறுமி தபசந்தி தகுவ (12). தந்தை டீக்கடையில் வேலை செய்து வருகிறார். சிறுமிக்கு பிறவி லேயே வலது பக்க மேல் உதடு மற்றும் ஈரலில் கட்டி இருந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக திராட்சை கொத்து போல் கட்டி வளர்ந்துவிட்டது. இந்த கட்டியால் சிறுமி பல்வேறு சிரமங்களுக்கு ஆளானார்.

புவனேஷ்வர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிறுமி அழைத்து செல்லப்பட்டார். ஆனால், டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு கட்டியை அகற்றுவது கடினம் என்று தெரிவித்துவிட்டனர்.

இதையடுத்து, உறவினர் ஒரு வரின் உதவியுடன் சிறுமி சிகிச்சைக் காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். டாக்டர்கள் குழுவினர் பரி சோதனை செய்து பார்த்ததில் மேல் உதடு, மூக்கு மற்றும் கண் ணுக்கு போகும் ரத்தநாளங்கள் ஒன்று சேர்ந்து தேன்கூடு போன்ற வடிவமைப்பு கொண்ட இடத்தில் பிறவிலேயே ஏற்பட்டுள்ள ரத்த நாள கட்டி என்பது கண்டுபிடிக்கப் பட்டது.

இதனைத் தொடர்ந்து ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறைத் தலை வர் டாக்டர் க.இளஞ்சேரலாதன் தலைமையில் இண்டர்வென்ஷ னல் ரேடியாலஜிஸ்ட் பெரியகருப் பன், டாக்டர் சி.சண்முகவேலா யுதம், பா.தீபன்குமார், தளவாய் சுந்தரம், மயக்கவியல் டாக்டர்கள் சித்ரா தேவி, நரசிம்மன் ஆகியோர் கொண்ட குழுவினர் முதலில் சிறுமி யின் வலது தொடையில் சிறிய துளையிட்டு அங்குள்ள ரத்தக் குழாயில் நவீன கருவியின் உதவி யுடன் வேதியியல் பொருளை தேன்கூடு போன்ற அமைப்பில் செலுத்தி ரத்தத்தை உறைய வைத்தனர்.

பின்னர் கட்டியை அகற்றி முகத்தைச் சீரமைத்தனர். இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சிறுமி நலமாக இருக்கிறார்.

இந்த அறுவை சிகிச்சை குறித்து ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் க.இளஞ்சேர லாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒடிசா சிறுமிக்கு செய்யப்பட்டது மிகவும் சிக்கலான அறுவை சிகிச் சையாகும். சில நேரங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படும். அந்த இடத்தில் ரத்த ஓட்டத்தை முழுமையாக நிறுத்தி வெற்றிகர மாக கட்டி அகற்றப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய் வதற்கு ரூ.8 லட்சம் வரை செல வாகும். ஒரு லட்சம் பேரில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுகின் றனர். அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2017-2018-ம் ஆண்டில் மட்டும் 48 நோயா ளிகளின் பிறவி ரத்தநாள குறை பாடு கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு டாக்டர் க.இளஞ் சேரலாதன் தெரிவித்தார்.

சிறுமியின் பிறவி ரத்தநாள கட்டியை அகற்றி முகத்தை சீர மைத்த டாக்டர்கள் குழுவினரை மருத்துவமனை டீன் எஸ்.பொன் னம்பல நமச்சிவாயம் பாராட்டி னார். அப்போது மருத்துவமனை ஆர்எம்ஓ ரமேஷ் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x