Published : 24 Oct 2018 08:54 AM
Last Updated : 24 Oct 2018 08:54 AM

டெண்டர்களை முடிவு செய்வதில் முதல்வர், அமைச்சர்களுக்கு தொடர்பு இல்லை: டி.ஆர்.பாலு புகாருக்கு அமைச்சர் பி.தங்கமணி விளக்கம்

மூத்த அதிகாரிகளை உறுப்பினர்களாகக் கொண்ட 2 குழுக்கள்தான் டெண்டர்களை முடிவு செய்கின்றனவே தவிர, இதில் துறையின் அமைச்சருக்கோ, முதல்வருக்கோ எந்தத் தொடர்பும் கிடையாது என்று அமைச்சர் பி.தங்கமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடைமுறைகள் தெரியாமல் தேசிய நெடுஞ்சாலை திட்டங் களுக்கு அனுமதி வழங்குவது மட்டுமே மத்திய சாலைப் போக்கு வரத்து அமைச்சகத்தின் பணி என்றும் சாலைப் பணிகளை செயல் படுத்துவது, டெண்டர் விடுவது, டெண்டர்களை முடிவு செய்வது எல்லாம் இந்திய தேசிய நெடுஞ் சாலை ஆணையத்தின் பணி என் றும் டி.ஆர்.பாலு கூறியிருக்கிறார். மாநில நெடுஞ்சாலைப் பணிகளை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைகள் தெரியாமல் போன தால் விவரமில்லாமல் அவர் இப்படி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திமுக ஆட்சிக் காலத்தில், ஒப்பந்த விண்ணப்பங்களை பெட்டியில் போடும் பாக்ஸ் டெண்டர் திட்டம், நடைமுறையில் இருந்தது. ஆனால் அதிமுக ஆட்சியில் ஆன்லைன் முறையில் வெளிப்படையாக டெண்டர் பணிகள் நடக்கின்றன.

2 குழுக்கள்

தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையிலும், மூத்த அதிகாரிகளை உறுப்பினர்களாகக் கொண்ட 2 குழுக்கள்தான் டெண்டர்களை முடிவு செய்கின்றனவே தவிர, இதில் துறையின் அமைச்சருக்கும், தற்போது துறையின் அமைச்சராக உள்ள முதல்வருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

டெண்டர் தொடர்புடைய கோப்பு கள், துறையின் அமைச்சருக்கு வராதபோது, சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது எப்படி ஊழல் குற்றச்சாட்டு எப்படி கூற முடியும்.

சாலைப் பணிகள் குறித்த டெண்டர்களில் முறைகேடு நடந் திருப்பதாக ஊழல் கண்காணிப்புத் துறையிடம் திமுக அளித்துள்ள புகாரில் கூறப்பட்டிருப்பதற்கும், முதல்வருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவிநாசி வழித்தடத்தில் ஒரு கி.மீ. சாலை அமைக்க ரூ.2.20 கோடிதான் செலவாகும் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.

அப்படியானால் 12 ஆண்டு களுக்கு முன்பு, 2006-ம் ஆண்டு, டி.ஆர்.பாலு மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச் சராக இருந்தபோது, சேலம் - குமாரபாளையம் நான்கு வழிச் சாலை, ஒரு கி.மீ.க்கு ரூ.8.78 கோடி செலவானது எப்படி? குமாரபாளையம் - செங்கப்பள்ளி சாலை அமைக்க 1 கி.மீ.க்கு ரூ.7.83 கோடி செலவானது எப்படி என்றுதான் முதல்வர் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விகளுக்கு டிஆர்.பாலு நேரடியாக பதில் அளிக்காமல் மழுப்பல் அறிக்கை விட்டுள்ளார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x