Published : 20 Oct 2018 09:46 AM
Last Updated : 20 Oct 2018 09:46 AM

சீரடி ஸ்ரீ சாய்பாபாவின் மகா சமாதி தினம்:மயிலாப்பூர் அகில இந்திய சாய் சமாஜத்தில் நூற்றாண்டு விழா

மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் சீரடி ஸ்ரீசாய்பாபாவின் மகா சமாதி தினம் அக். 18, 19 ஆகிய இரு தினங்களும் அனுசரிக்கப்பட்டது.

மயிலாப்பூர் அலமேலுமங்கா புரம் பகுதியில் அமைந்துள்ள அகில இந்திய சாய் சமாஜத்தில் சீரடி ஸ்ரீசாய்பாபாவின் மகா சமாதி நூற்றாண்டு விழா செப். 27-ம் தேதி தொடங்கியது. இம்மாதம் 26-ம் தேதி வரை நடைபெறும். அக். 18, 19 ஆகிய இருநாட்களும் சீரடி சாய்பாபாவின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த இரண்டு நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பாபாவின் தங்க டாலர்

அக். 18 அன்று சென்னை முழுவதும் சுமார் 2 லட்சம் பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட் டது. தசமி திதியில் பிறந்த 100 குழந்தைகளுக்கு பாபாவின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க டாலர் வழங்கப்பட்டது. காலை 5 மணி முதல் காகட ஆரத்தி, பால் அபிஷேகம், சஹஸ்ர நாம அர்ச்சனை, தீபாராதனை, ருத்ர அபிஷேகம் நடைபெற்றது. இரவு பல்லக்கு உற்சவம் மற்றும் பாம்பே ஜெய ஸ்ரீயின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மாட வீதிகளில் வீதியுலா

அக். 19 விஜய தசமி நாள் அன்று சென்னையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம் ஆகியவற்றில் அன்னதானம் நடைபெற்றது. காலை 8-30 முதல் மதியம் 12 மணி வரை பஜன் நிகழ்ச்சி, மாலை 4 மணிக்கு மவுலி மொகைதீன் சாகுல் அமீது வழங்கும் திருக்குரான் ஓதுதல் நிகழ்ச்சி, இரவு 7-30 மணிக்கு பாபா மூர்த்தி, நரசிம்ம சுவாமிஜி படத்துடன் மாட வீதிகளில் வீதியுலா நடை பெற்றன.

இதுகுறித்து அகில இந்திய சாய் சமாஜத்தின் செயலர் ஏ. செல்வராஜ் கூறியதாவது:

மயிலாப்பூர் சாய் அனைவருக்கும் தாய். அரேபிய, பார்சி மொழிகளில் ‘சாய்’ என்பது ‘சுவாமி, ஆசான், மதகுரு’ என்று பொருள்படும். சமஸ்கிருத மொழி யில் ‘கனிவையும் மதிப்பையும் கொண்ட தந்தை’ என்று பொருள் படும். அவருடைய துறவு நிலைக் குரிய தன்னடக்கம், சீரியதாகவும் உன்னதமாகவும் இருந்தது. சாதி, மத, இன வேறுபாடின்றி அனைவ ரிடமும் அன்பு பாராட்டியவர் சாய்பாபா.

சென்னை மயிலையில் சாய் பாபாவுக்கு கோயில் கட்டிய ஸ்ரீ நரசிம்ம சுவாமிஜியின் பங்கு அளப்பரியது. அவருடைய ஆராதனை தினம் வரும் 24-ம் தேதி அனுசரிக்கப்படும்.

அன்று நடைபெறவிருக்கும் நிறுவனர் தினக் கூட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு புடவை, வேட்டி, தையல் மிஷின், மாற்றுத் திறனாளி களுக்கு மூன்று சக்கர வாகன வண்டி, காது கேளாதவர்களுக்கு காது கேட்கும் கருவி வழங்கப்படும். அன்று நரசிம்ம சுவாமிஜிக்கு சிறப்பு அபிஷேகமும், சாய் சத்ய நாராயண பூஜையும் நடைபெறும். அனைவரும் தினமும் இங்கு வந்து சாய்பாபாவின் அருள் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x