Published : 30 Oct 2018 09:08 AM
Last Updated : 30 Oct 2018 09:08 AM

2019-ம் ஆண்டில் 23 அரசு விடுமுறை நாட்கள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழக அரசு அடுத்த 2019-ம் ஆண்டில் 23 நாட்களை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் செலா வணி முறிச்சட்டத்தின் கீழ் அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில்,வரும் 2019-ம் ஆண்டில் வழக்கமான சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் தவிர, பண்டிகைகள், தேசத்தலைவர்களின் பிறந்த தினம் உள்ளிட்ட 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட் டுள்ளது. இது தொடர்பாக அரசாணை  வெளியிடப் பட்டுள்ளது:

இதில், தமிழ் வருடப்பிறப்பு, தீபாவளி, மிலாடிநபி ஆகிய 3 பண்டிகைகளும் வழக்கமான விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமைகளில் வருகிறது.

புனித வெள்ளி, கிருஷ்ண ஜெயந்தி ஆகியவை வெள்ளிக்கிழமையில் வருவதால் அடுத்த 2 தினங்கள் சனி, ஞாயிறு என்பதால் 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

பக்ரீத், விநாயகர் சதுர்த்தி இரண்டும் திங்கள்கிழமை என்பதால் முந்தைய சனி, ஞாயிறு சேர்த்து, 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. ஆயுத பூஜை, விஜயதசமி ஆகியவை திங்கள், செவ்வாய் கிழமைகளில் வருவதால் முந்தைய சனி, ஞாயிறு சேர்த்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x