Published : 17 Oct 2018 11:51 AM
Last Updated : 17 Oct 2018 11:51 AM

மதுரை அருகே குரு பகவான் கோயிலில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் தோட்டத்தில் மீட்பு: ஐஜி பொன். மாணிக்கவேல் நேரில் விசாரணை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே குரு பகவான் கோயிலில் 3 நாட்களுக்கு முன்பு, திருடப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் மீட்கப் பட்டன. போலீஸார் தேடுதலை தீவிரப்படுத்தியதால் கொள்ளை யர்கள் விவசாயத் தோட்டத்தில் அச்சிலைகளைப் போட்டுச் சென்ற னர். மதுரை வந்த ஐஜி பொன்.மாணிக்கவேல், இதுதொடர் பாக நேரில் விசாரணை நடத்தினார்.

குருவித்துறையில் பழமையான சித்திரரத வல்லபபெருமாள் கோயில் உள்ளது. இங்கு குரு பகவான் தனி சன்னதியில் எழுந் தருளியுள்ளார். இங்கு கடந்த அக்டோபர் 13-ம் தேதி இரவு வல்லபபெருமாள், சீனிவாச பெருமாள், தேவி, பூதேவி ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் திருடு போயின.

இது தொடர்பாக, மதுரை மாவட்டக் காவல் கண் காணிப்பாளர் என். மணிவண்ணன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை யினர் கோயில் சிசிடிவி கேமரா பதிவுகள் உட்பட பல்வேறு தகவல்களை சேகரித்து விசா ரணையைத் தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்று அதி காலையில் மதுரை மாவட்டம், விளாம்பட்டி அருகிலுள்ள கல்யாணிபட்டி பிரிவில் விவசாயத் தோட்டத்தில் சாமி சிலைகள் கிடப்பதாக, அப்பகுதி விவசாயி கணேசன் என்பவர் போலீஸாருக்கு தகவல் கொடுத் தார். இதையடுத்து சோழவந்தான் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று அச்சிலைகளை கைப் பற்றினர். அவற்றை ஆய்வு செய்த தில், குருவித்துறை கோயிலில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் எனத் தெரியவந்தது. அந்த சிலை களை, காடுபட்டி காவல் நிலையத் துக்கு கொண்டு வந்தனர். தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ் வரன் சுவாமி சிலைகளை பார்வை யிட்டார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் நேற்று குருவித்துறைக்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: குருவித்துறை கோயிலில் திருடு போய் மீட்கப்பட்ட சிலைகள் பழமையானவை.

இந்து சமய அறநிலையத் துறையால் 1992-ல் பதிவு செய்யப் பட்டவை. சிலைகள் பற்றி தகவல் கொடுத்த விவசாயி கணேசனுக்கு சன்மானம் வழங்க அரசுக்கு பரிந் துரை செய்யப்படும். தமிழகத்தில் காணாமல்போன சிலைகள் தொடர்ந்து மீட்கப்படுகின்றன. கோயில் சிலைகளை திருடிய நபர்கள் ஒரு வாரத்துக்குள் கைது செய்யப்படுவர். சிலைகளை மீட்க துரிதமாகச் செயல்பட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், டிஎஸ்பி மோகன்குமார், ஆய்வாளர் பாலாஜி ஆகியோர் அடங்கிய தனிப்படையினருக்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், எஸ்பி மணி வண்ணன், வாடிப்பட்டி வட்டாட் சியர் பார்த்திபன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.சிலைகள் பற்றி தகவல் கொடுத்த விவசாயி கணேசனுக்கு சன்மானம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். கோயில் சிலைகளை திருடிய நபர்கள் ஒரு வாரத்துக்குள் கைது செய்யப்படுவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x