Published : 10 Aug 2018 10:05 AM
Last Updated : 10 Aug 2018 10:05 AM

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கும் விவகாரம்;ஜெ.வுக்கு மனவேதனை அளித்த திமுகவுக்கு அதிமுகவின் வெள்ளை மனம் புரியாது: மு.க.ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில்

ஜெயலலிதாவுக்கு மனவேதனை யையும், அவமானத்தையும் பரி சளித்த திமுகவினருக்கு அதிமுக அரசின் வெள்ளை மனம் புரியாது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

முன்னாள் முதல்வர் கருணாநிதி 95 வயதில், உடல்நலக்குறைவால் காலமானார். இந்த துயர நிகழ்வு நடந்த சில மணி நேரங்களில் முரசொலியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் வெளியானது. அதில் காணப் படும் அபாண்ட குற்றச்சாட்டு கண்டு உள்ளம் பதைபதைக்கிறது. அவர் அதில், அண்ணா நினை விடம் அருகில் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய இடம் கேட்ட தாகவும், அந்த வேண்டுகோள் காழ்ப்புணர்ச்சியாலும், ஆட்டுவிப் போரின் சூழ்ச்சியாலும் மறுக்கப் பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த ஒரு முதுபெரும் அரசியல் தலைவருக்கு உள் ளார்ந்த மரியாதையுடனும், அக் கறையுடனும் அதிமுக அரசு சிறப்புகளை செய்துள்ளது. இறுதிச் சடங்கு நாளில் அரசு விடுமுறை அளித்தது. கருணாநிதியின் உடலை மக்கள் பார்வைக்கு ராஜாஜி அரங்கத்தில் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. அவரது உடலில் தேசியக் கொடி போர்த்தப்பட்ட துடன், முழு ராணுவ மரியாதை யுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. துக்கம் அனுசரிக்கும் வகையில் 7 நாட்கள் அரைக்கம்பத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது. அரசு விழாக்கள் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டன.

மெரினா கடற்கரையில் புதிய கல்லறைகள், நினைவிடங்கள் அமைப்பது தொடர்பாக 5 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை அப்புறப்படுத்தத் துடித்தவர்கள் தொடுத்த வழக்குகளாகும். இதனால் சட்டச்சிக்கல் உருவாகி, கடைசி நேரத்தில் பெரும்குழப்பம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், மாற்று இடம் ஒதுக்க அரசு முன்வந்தது. இதில் ஏது காழ்ப்புணர்ச்சி?

முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவின் படத்தை சட்டப்பேரவைக் குள் திறக்க எதிர்ப்பு தெரிவித் ததுடன், மெரினாவில் ஜெயலலி தாவின் நினைவிடத்தை அப்புறப் படுத்துவோம் என்று பேசிய திமுகவினருக்கு மனசாட்சி இருக் கிறதா என்ற கேள்வி எழுகிறது.

முன்னாள் முதல்வர்கள் காம ராஜர், ஜானகிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க அப்போ தைய முதல்வர் கருணாநிதியிடம் இடம் கேட்டபோது, முதல்வ ராகவே இருந்து மரணமடைவோருக்குதான் மெரினாவில் இடம் அளிக்கப்படு மென மறுத்ததாக கோரிக்கை வைத்து ஏமாந்தவர்கள் கூறிய தகவல்களை நினைவூட்டுகிறேன்.

ஜெயலலிதா மீது வழக்கு களை போட்டு, அவருக்கு மன வேதனையையும், அவமானத் தையும் பரிசளித்த திமுகவினருக்கு அதிமுக அரசின் களங்கமில்லா வெள்ளை மனம் புரியாது. எனவே, திமுக தலைமை பழைய பாதையில் பயணித்து பழிசொல் வீசுவது கண்டு கலங்கப் போவதுமில்லை; கடமை தவறப் போவதுமில்லை.

இவ்வாறு அறிக்கையில் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x