Published : 28 Aug 2018 03:57 PM
Last Updated : 28 Aug 2018 03:57 PM

சுகாதாரத் துறையில் பணிக்காலத்தில் காலமான 42 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

 பொது சுகாதாரத் துறையில் பணிக்காலத்தில் காலமான 42 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக சுகாதார துறை செவ்வாய்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், பொது சுகாதாரத் துறையில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் காலமான 42 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் அவ்வப்போது புதியதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பும் பொருட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுரையின் பேரில், தமிழ்நாட்டில் சுகாதாரத் துறைக்கென அமைக்கப்பட்ட மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள், என இதுவரை 23 ஆயிரத்து 882 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதுதவிர, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தெரிவு செய்யப்பட்ட 216 வட்டார சுகாதார புள்ளியியலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, பொது சுகாதாரத் துறையில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் காலமான 42 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x