Published : 09 Aug 2018 08:04 PM
Last Updated : 09 Aug 2018 08:04 PM

‘மாதம்தோறும் முஸ்லிம் அல்லது கிறிஸ்தவப் பாடல்’: வெறுப்புணர்வை உண்டாக்குபவர்களுக்கு டி.எம். கிருஷ்ணா சவால்

மதங்களின் மீது வெறுப்புணர்வை உண்டாக்கி பிரச்சாரம் செய்பவர்களுக்குக் கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா புதிய சவால் விடுத்துள்ளார்.

கர்நாடக இசைப்பாடகர் டி.எம். கிருஷ்ணா. வழக்கமான கர்நாடக இசைப்பாடகர் அன்றி, சமூக மாற்றத்துக்குத் தேவையான கருத்துக்களையும் சொற்பொழிவுகளையும் இசையோடு சேர்ந்து வழங்கி வருபவர். கர்நாடக இசை என்பது மேல்தட்டு, உயர்குடிமக்களுக்குத்தான என்பதை உடைத்தெறிந்து வருபவர். குடிசைவாழ் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குக் கர்நாடக இசையே கற்றுக்கொடுத்து வருகிறார். பல்வேறு இசைக்கச்சேரிகளையும், இசையையும் கற்றுத் தருகிறார்.

சமீபத்தில் கர்நாடக இசை என்பது குறிப்பிட்ட மதம் சார்ந்தது இல்லை அனைத்து மதத்துக்கும் பொதுவானது என்பதைக் குறிக்கும் வகையில் கிறிஸ்தவ பாடல் ஒன்றைக் கிருஷ்ணா வெளியிட்டிருந்தார். இதை ஏராளமானோர் கிண்டல் செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர்.

இது குறித்து டிஎம். கிருஷ்ணா இன்று டிவிட்டரில் ஒரு கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், நான் கர்நாடக இசையில், கிறிஸ்தவ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளதைக் கிண்டல் செய்தும், அவமரியாதை செய்யும் வகையிலும் பல்வேறு கருத்துக்களை சிலர் சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகிறார்கள். தீவிர ஆலோசனைக்குப் பின் ஒரு முடிவு எடுத்துள்ளேன்.

இனி ஒவ்வொரு மாதமும், ஏசு குறித்தும், அல்லா குறித்தும் நான் கர்நாடக இசையில் பாடல் பாடி வெளியிடப்போகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x