Published : 03 Aug 2018 07:33 AM
Last Updated : 03 Aug 2018 07:33 AM

அதிமுக எம்எல்ஏ போஸ் மாரடைப்பால் மரணம்: மதுரையில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி

மாரடைப்பால் இறந்த திருப்பரங் குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே.போஸ் உடலுக்கு முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அஞ்சலி செலுத்தினர்.

திருப்பரங்குன்றம் எம்எல்ஏவாக இருந்தவர் ஏ.கே.போஸ்(68). இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு டாக்டர் பி.ஜெயலட்சுமி தேவி, ஜெயகார்த்திகா ஆகிய 2 மகள்களும், பி.சிவசுப்பிரமணியன், பி.சங்கர் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

போஸ் கடந்த 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவில் இருந்து வந்தார். மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார். 2006-ம் ஆண்டு முதல் முறையாக திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஆனார். 2011-ம் ஆண்டு மதுரை வடக்கு தொகுதியில் வெற்றி பெற்று 2-வது முறையாக எம்எல்ஏ ஆனார்.

இந்நிலையில் 2016-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற எஸ்.எம்.சீனிவேல் இறந்ததால் ஏ.கே.போஸ் இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் எம்எல்ஏ ஆனார். ஆனால், அவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டார். நேற்று அதிகாலை 1 மணியளவில் ஏ.கே.போஸ் திடீர் மாரடைப்பால் இறந்தார்.

இதையடுத்து நேற்று மதுரை வந்த முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் போஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.

அமைச்சர்கள் திண்டுக்கல் சினிவாசன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், புறநகர் மாவட்டச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள் போஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் முதல்வர் கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே ஏ.கே.போஸ் விசுவாசமான தொண்ட ராக இருந்து வந்தார். ஜெயலலி தாவின் நன்மதிப்பைப் பெற்றவர். கட்சிப் பணியாற்றுவதில் ஆர்வம் கொண்டவர். மாவட்ட அவைத் தலைவர், மாவட்ட துணைச் செயலாளர், மாநகரச் செயலாளர், எம்எல்ஏ எனப் பல பதவிகளை வகித் தவர். அவரது மறைவால் கட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

அமமுக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் அக்கட்சியினர் போஸ் உடலுக்கு அஞ்சலி செலுத் தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x