Published : 28 Aug 2018 09:29 AM
Last Updated : 28 Aug 2018 09:29 AM

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 136 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை: முதல்வர் பழனிசாமி வழங்கினார் 

ஒக்கி புயலில் உயிரிழந்த மற்றும் காணாமல் போன மீனவர்களில் 136 பேர் குடும்பங்களில் தலா ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப் பணிக்கான நியமன ஆணை களை முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்.

சென்னை தலைமைச் செயல கத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி யில், 136 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் அடையாள மாக 10 பேருக்கு நியமன ஆணை களை முதல்வர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதய குமார், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், செயலர்கள் கே.கோபால், அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

மீனவர்கள் குடும்பத்தில் ஒருவ ருக்கு அரசு வேலை அளிக்கப் பட்டது தொடர்பாக அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:

3,512 மீனவர்கள்

கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை ஒக்கி புயல் தாக்கி யது. ஆயிரக்கணக்கான மீனவர்கள் உடைமைகள், வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டனர். கட லுக்கு சென்று மாட்டிக் கொண்ட 3,512 மீனவர்கள், 24 நாட்டுப்படகுகள், 264 மீன்பிடி விசைப்படகுகளும் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டன. வெகுதூரம் சென்று மீன்பிடி தொழில் செய் பவர்களை கண்டுபிடிக்க, மத்திய அரசு உதவியுடன் முயற்சி எடுக் கப்பட்டது.

தலா ரூ.20 லட்சம் நிவாரணம்

இந்தப் புயலால் 27 மீனவர்கள் உயிரிழந்தனர். அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் அளிக்கப்பட்டது. 177 மீனவர்கள் எங்கு இருக்கின்றனர் என்பது தெரியவில்லை. எனவே, காணாமல் போன மீனவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர்களுக்கும் முதலில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.10 லட்சம் விரைவில் அவர்களுக்கு கிடைக்கும்.

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட 204 குடும்பங்களை சேர்ந்தவர் களுக்கு அரசு வேலை அளிக்கப் படும் என முதல்வர் வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்பேரில் அரசு உத்தரவு போடப்பட்டு, கடலூர், நாகை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவு வழங்கப்பட்டுள் ளது. தற்போது 136 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 68 பேருக்கு அவர்கள் விரும்பும் பணிகள் வழங்கப்படும். அவர் கள் விரும்பிய துறைகளில், தகுதி அடிப்படையில் பணி வழங் கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் துறைகளில் உள்ள காலிப்பணி யிடங்கள் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்களால் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதன் பேரில் நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 204 குடும்பங்களுக்கு வேலைவாய்ப்புக்கான வாக்குறுதியை முதல்வர் அளித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x