Published : 23 Aug 2018 09:41 AM
Last Updated : 23 Aug 2018 09:41 AM

தாமிரபரணி மஹாபுஷ்கரம் - புனித நீராடல் பெருவிழா 2018; ‘நதிகளும் தமிழ் சமுதாயமும்’ எனும் பன்னாட்டுப் படைப்பரங்கம்: கவிஞர்கள், எழுத்தாளர்களிடமிருந்து படைப்புகளை வரவேற்கிறது ஸ்ரீசங்கரா கல்லூரி

 

தாமிரபரணி மஹாபுஷ்கரம் என்னும் புனித நீராடல் பெருவிழாவையொட்டி நடைபெறும் ‘நதிகளும் தமிழ்ச்சமுதாயமும்’ என்ற தலைப் பில் நடைபெறும் பன்னாட்டுப் படைப்பரங்கத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் தாமிரபரணி மஹாபுஷ்கரம் என்னும் புனித நீராடல் பெருவிழா 2018 அக்டோபர் 12 முதல் 23 வரை நடைபெறவுள்ளது.

தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், தமிழ் ஆர்வலர்கள் பல்லாயிரக்கணக்கில் தாமிரபரணி மஹாபுஷ்கரத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

இந்த புனித விழாவை யோட்டி சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), காஞ்சிபுரம், மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை, மலேசியா, உலக தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம், மலேசியா, விருபா தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு இணையதளம், யாழ்ப்பாணம், வல்லமை ஆய்வு மின்னிதழ், இந்து தமிழ் நாளிதழ் ஆகியவை இணைந்து ‘நதிகளும் தமிழ்ச்சமுதாயமும்’ என்ற பன்னாட்டுப் படைப்பரங்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்த படைப்பரங்கத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து சங்கரா கல்லூரி முதல்வர் தெரிவித்ததாவது: 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் தாமிரபரணி மஹாபுஷ்கரம் என்னும் புனித நீராடல் பெருவிழா 2018 அக்டோபர் 12 முதல் 23 வரை நடைபெறவுள்ளது.

தமிழகம், இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், தமிழ் ஆர்வலர்கள் பல்லாயிரக்கணக்கில் தாமிரபரணி மஹாபுஷ்கரத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்த விழாவையொட்டி நாங்கள் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து ‘நதிகளும் தமிழ்ச் சமுதாயமும்’ என்ற பன்னாட்டுப் படைப்பரங்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த படைப்பரங்கம் நடை பெறும் நாள் மற்றும் விரிவான நிகழ்ச்சி குறித்த அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும்.

தமிழ்ச் சமுதாயம் நதி களோடு கொண்டிருந்த உறவையும் அதன் வழி பண்பாட்டு விழுமியங்களையும் வெளிப்படுத்துவதோடு அல்லாமல் தமிழரின் நீர்மேலாண்மை அறிவையும் இயற்கையோடு இயைந்த வாழ்வையும் மற்றும் எதிர்கால நீர்மேலாண்மைச் சிந்தனைகளையும் விதைக்கும் வண்ணம் தமிழ் படைப்பாளர்கள், ஆர்வலர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் தங்களது கவிதை களையும், பொதுக் கட்டுரை களையும் மின்னஞ்சல் (thamira baranisankara@gmail.com) மூலம் 28.09.2018 க்குள் அனுப்பலாம். பதிவுக் கட்டணம் ஏதுமில்லை. முதல் மூன்று பரிசுகள் முறையே ரூ.20,000, ரூ.10,000, ரூ.5,000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.sankaracollege.edu.in மற்றும் 9486150013, 9786985451 என்ற எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x