Published : 31 Aug 2018 08:36 AM
Last Updated : 31 Aug 2018 08:36 AM

வரைவு பட்டியல் நாளை வெளியாகிறது; வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்காக இன்று அனைத்து கட்சிக் கூட்டம்: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தலைமையில் நடக்கிறது

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி கள் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடக்கிறது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் அதாவது 18 வயது பூர்த்தியடைந்தவர்களை சேர்ப்பதற்கான சுருக்கமுறை திருத்தப் பணிகள் செப்டம்பரில் நடக்கும். குறிப்பாக, அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அன்று 18 வயது நிரம்பும் ஆண், பெண் இருவரது பெயர்களும் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்பது இந்தப் பணியின் நோக்கமாகும்.

இதற்காக ஆண்டுதோறும் செப் டம்பர் மாதம் முதல் தேதியில் அதுவரை வாக்காளர் பட்டிய லில் சேர்க்கப்பட்ட பெயர்கள் அடிப் படையிலான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இந்த ஆண்டு, வரைவு வாக் காளர் பட்டியல் நாளை (செப்.1)வெளியிடப்படுகிறது. இப்பட்டியல், கிராமசபை கூட்டம் நடக்கும் இடங்களில் வைக்கப்படும்.

இதுதவிர, வாக்குச்சாவடிகள், குடியிருப்போர் சங்கங்களிலும் பார்வைக்கு வைக்கப்படும். அப் போது பட்டியலில் பெயர் இருக் கிறதா என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ளலாம்.

இதைத் தொடர்ந்து ஒரு மாதம் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணிகள் நடக்கும். இந்த காலகட்டத்தில், அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 1-ம் தேதி 18 வயது பூர்த்தியடைபவர்கள் வாக் காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் விண்ணப்பம் அளிக்கலாம்.

பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற் றையும் மேற்கொள்ளலாம். ஆன் லைன் மூலமும் விண்ணப்பிக் கலாம். இப்பணிகள் முடிந்ததும், விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, புதிய இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். இந்த வாக்காளர் பட்டியல், வழக்கமாக ஜனவரி 5-ம் தேதி வழங்கப்படும். புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கான புகைப்பட அடையாள அட்டை, தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி வழங்கப்படும்.

இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடர்பாக விவாதிக்க, அனைத்து கட்சிக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடக்கிறது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x