Published : 23 Aug 2018 10:08 AM
Last Updated : 23 Aug 2018 10:08 AM

விபத்து சிகிச்சைகளின் தரத்தை உயர்த்த ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்துடன் தமிழக சுகாதாரத் துறை ஒப்பந்தம்

தமிழகத்தில் விபத்து சிகிச்சைகளின் தரத்தை உயர்த்துவது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசுடன் தமிழக சுகாதாரத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

தமிழக சுகாதாரத் துறை சார்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை சிறப்பு திட்டம் (தாய் திட்டம்) கடந்த ஜனவரி மாதம் முதல் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரிலேயாவின் விக்டோரியா மாநிலத்தின் விபத்து சிகிச்சை பிரிவுகளின் நடைமுறைகளை பின்பற்றி இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் விபத்து காய சிகிச்சை மையங்களை மேலும் வலுப்படுத்துவது குறித்து அறிந்து கொள்ள விக்டோரியா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஜில் ஹென்னசி, விபத்து காய சிகிச்சை துறை மருத்துவக் குழுவினர் அழைப்பு விடுத்ததன் பேரில், சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமையிலான குழுவினர் அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.

தமிழக குழுவினருக்கு நேற்று விக்டோரியா மாநில சபாநாயகர் சிறப்பான வரவேற்பு அளித்தார். பின்னர் நாடாளுமன்றத்தில் சிறப்பு விருந்தினர்களாக அவர்கள் கவுர விக்கப்பட்டனர். பின்னர் விக்டோ ரியா அரசுடன் தமிழக சுகாதாரத் துறையினர் வரலாற்று சிறப்பு மிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்படி தமிழகத்தில் விபத்து சிகிச்சை களுக்கான அமைப்புகளை ஏற் படுத்துதல், மாநில அளவிலான விபத்து பதிவேடுகளை பராமரித் தல், விபத்து சிகிச்சைகளின் தரம் உயர்த்துதல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:

தமிழக சுகாதாரத் துறை இந்திய அளவில் முதன்மை மற்றும் முன்னோடியாக விளங்கி வருகிறது. விபத்துக்கள் மற்றும் பல்வேறு அவசர கால நிகழ்வு களினால் ஏற்படக்கூடிய இறப் பினை கட்டுப்படுத்துவது இப்பயணத்தின் முக்கிய நோக்க மாகும். தமிழகத்தில் விபத்து காய சிகிச்சைகளை உலகத் தரத்துக்கு இணையாக மேம்படுத்துவதற்கு இந்த பயணம் உறுதுணையாக அமையும் என நம்புகிறோம். சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விக்டோரியா மாநில அரசுடன் இணைந்து சோதனை முறையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்ட 6 மாதத்தில், விபத்தினால் ஏற்படக்கூடிய இறப்புகள் 8.3 சதவீதத்தில் இருந்து 5.6 சதவீதமாக குறைத்துள்ளது. இதுவே இத்திட்டத்தின் வெற்றியாகும்.

இதேபோன்று 108 ஆம்புலன்ஸ் சேவையும் உலகத் தரத்துக்கு இணையாக தேவைப்படும் இடத்துக்கு சென்று சேரும் கால அளவு 8.36 நிமிடமாக குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் ஆஸ்திரேலியாவின் தேசிய விபத்து ஆராய்ச்சி நிறுவனத்தை தமிழக குழுவினர் பார்வையிட்டனர். அப்போது, ஆஸ்திரேலியாவின் தேசிய விபத்து ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் மார்க் பிட்ஜெரால்ட், துணை இயக்குநர் ஜோசப் மேத்யூ, முதன்மை செயல் அலுவலர் சைமன் அலெக்சாண்டர், அவசர சிகிச்சை துறை இயக்குநர் டி.வில்லியர்ஸ் ஸ்மித், தீவிர சிகிச்சை பிரிவு இயக்குநர் ஸ்டீவ் மெக்கலின் மற்றும் ஆஸ்திரேலிய மருத்துவக் குழுவினர், தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் செயலாளர் நாகராஜன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழக மேலாண்மை இயக்குநர் உமாநாத், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, ஆகியோர் உடனிருந்தனர்.தமிழகத்தில் விபத்து காய சிகிச்சைகளை உலகத் தரத்துக்கு இணையாக மேம்படுத்துவதற்கு இந்த பயணம் உறுதுணையாக அமையும் என நம்புகிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x