Published : 27 Aug 2014 12:00 AM
Last Updated : 27 Aug 2014 12:00 AM

காஷ்மீருக்கு விமான சுற்றுலா: ஐஆர்சிடிசி அறிவிப்பு

ஐ.ஆர்.சி.டி.சி. தென்மண்டல கூடுதல் பொது மேலாளர் எல்.ரவிக்குமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் பல்வேறு சிறப்பு சுற்றுலாக்களை செயல்படுத்தி வருகிறது. விமானம் மூலம் சுற்றுலாவையும் ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் விடுமுறை நாட்களையொட்டி, காஷ்மீருக்கு 2 விமான சுற்றுலாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, செப்டம்பர் 27-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரையிலும், அக்டோபர் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையிலும் சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு ஸ்ரீநகர், குல்மார்க், பெஹல்காம் ஆகிய சுற்றுலா தலங்களைப் பார்த்துவிட்டு சென்னை அழைத்து வரப்படுவார்கள். இந்த விமான சுற்றுலா 5 இரவுகள், 6 பகல் பொழுதுகளைக் கொண்டதாகும். இதற்கான கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ.27,913. இதுபோல, சென்னையில் இருந்து கோவா மற்றும் ஷீரடிக்கும் விமான சுற்றுலா இயக்கப்படுகிறது.

இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு ஐஆர்சிடிசி.யின் சுற்றுலா தகவல் மற்றும் உதவி மையங் களான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்- 98409 02917, 98409 02919, காட்பாடி ரயில் நிலையம்- 98409 48484, மதுரை ரயில் நிலையம்- 90031 40714, 98409 02915 மற்றும் கோவை அலுவலகம்- 90031 40680 செல்போன்களிலும், www.irctctourism.com என்ற இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x