Last Updated : 31 Aug, 2018 09:53 AM

 

Published : 31 Aug 2018 09:53 AM
Last Updated : 31 Aug 2018 09:53 AM

பிரத்யேக சாய்வுதளம், கழிப்பறை போன்ற வசதிகள் இல்லாததால் அரசு கட்டிடங்களுக்கு செல்ல முடியாமல் மாற்றுத்திறனாளிகள் கடும் பாதிப்பு

அரசு, தனியார் கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக சாய்வுதளம், லிஃப்ட், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்படாததால், அங்கு சென்றுவர அவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

அரசு மற்றும் தனியார் கட் டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்றுவரும் வகையில் 5 விதிமுறைகளை செயல்படுத்த தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. ‘‘பொதுமக்கள் பயன்படுத்தும் மத்திய, மாநில அரசு அலுவலகங் கள், தனியார் வணிக வளாகங்கள், திரையரங்குகள், திருமண மண்ட பங்கள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட இடங்களில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக சென்றுவர சாய்வுதளம், கைப்பிடி, சிறப்பு கழிவறை, லிஃப்ட், வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே உள்ள அரசு கட்டி டங்களில் இவற்றை 180 நாட்களுக் குள் அமைக்க வேண்டும். புதிதாக கட்டப்படும் அரசு, தனியார் கட்டிடங் களின் வரைபடத்தில் மேற்கண்ட அம்சங்கள் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்’’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த அரசாணை வெளியிட்டு 5 ஆண்டுகள் ஆகியும் சென்னை எழிலகத்தில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலக கட்டிடம், நுங்கம் பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை, லிஃப்ட் உள்ளிட்ட எந்த வசதியும் செய்யப்படவில்லை.

அரசாணை வெளியான பிறகு கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான அரசு, தனியார் வணிக கட்டிடங்களி லும் இதுபோன்ற பிரத்யேக வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.

இதனால், மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகங்களுக்கு சென்று வருவதே சவாலாக மாறியுள் ளது.

இதுகுறித்து லயோலா கல்லூரி பேராசிரியர் டிஎம்என் தீபக் கூறிய தாவது:

என்னைப் போன்ற மாற்றுத்திற னாளிகள் அரசு மற்றும் தனியார் வணிக கட்டிடங்களுக்கு எளிதாக சென்றுவர வேண்டும் என்ற நோக்கிலான அரசாணை பிறப்பிக் கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் சிறிய மாற்றம்கூட ஏற்பட வில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் பொது இடங்களுக்கு சென்று வருவதே எங்களுக்கு சவாலாக உள்ளது.

பொது இடங்களுக்கு சென்ற நிலையில், இயற்கை உபாதை களைக் கழிப்பதற்குகூட வீட்டுக்கு தான் வரவேண்டி உள்ளது.

நடக்க முடியாதவர்களுக்கான சக்கர நாற்காலிகள், அரசு கட்டிடங்களில்கூட இருப்பதில்லை. பொது இடங்களில் எங்களுக்கான வசதிகள் இல்லாததால், பல கோடி பேர் இருந்தும், நாங்கள் மட்டும் தீவுபோல தனித்து விடப்பட்டிருக் கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மாற்றுத்திற னாளிகள் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாற்றுத்திறனாளிகள் நலனுக் கான தமிழக அரசாணை மட்டுமல் லாது, மத்திய அரசால் கடந்த 2016-ல் நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டமும் தற்போது அமலில் இருக்கிறது. பொதுமக்கள் கூடும் அரசு, தனியார் கட்டிடங்களில் மாற் றுத்திறனாளிகளுக்காக கழிவறை, லிஃப்ட், வாகனம் நிறுத்தும் இடம், சாய்வுதளம் உள்ளிட்ட 13 வசதி களை ஏற்படுத்த வேண்டும் என்று அதிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், பெரும்பாலான அரசு, தனியார் கட்டிடங்களில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதை நினைவுபடுத்தி சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை கடிதம் எழுதிவிட்டோம். எனினும் எந்த பலனும் இல்லை.

இதுபற்றி கண்காணிக்க அனைத்து துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து குழு அமைத்தால் மட்டுமே இதற்கு தீர்வு ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னை மாநகராட்சி அதிகாரி கள் கூறும்போது, ‘‘சென்னை மாநகராட்சிக்கு சொந்தமாக புதி தாக கட்டப்படும் கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்துவதற்கு ஏற்ற வசதி கள் செய்யப்படுகின்றன. மாநகராட் சியின் பழைய கட்டிடங்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இனி வரும் காலங் களில் மக்கள் கூடும் வணிக வளாகம், திரையரங்குகள் போன்ற வற்றிலும் மாற்றுத்திறனாளி களுக்கான வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

-மு.யுவராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x