Published : 23 Aug 2018 09:52 AM
Last Updated : 23 Aug 2018 09:52 AM

கருணாநிதியை போல திமுகவை மு.க.ஸ்டாலின் வழி நடத்துவார்: கவிஞர் வைரமுத்து நம்பிக்கை

கருணாநிதியைப் போல திமுக தலைவராக இருந்து கட்சியை மு.க.ஸ்டாலின் வழி நடத்துவார் என கவிஞர் வைரமுத்து தெரி வித்துள்ளார்.

மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினை விடத்தில் மலேசியாவில் இருந்து வந்திருந்த தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளு டன் வைரமுத்து நேற்று காலை அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்க ளிடம் அவர் கூறியதாவது: உலகத் தமிழர்களின் தமிழ் அடையாளமாக இருந்தவர் கருணாநிதி. உலகத் தமிழர்கள் கருணாநிதியை எந்த அள வுக்கு நேசித்தார்களோ, அந்த அளவுக்கு உலகத் தமிழர் களை கருணாநிதி நேசித்தார். திராவிட இயக்கமே உலகத் தமிழர்களுக்கான இயக்கமே.

கருணாநிதியின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் உலக செம்மொழி திருநாளாக உலகத் தமிழர்கள் கொண்டாட வேண்டும். பாரத ரத்னா விரு துக்கு கருணாநிதி முற்றிலும் தகுதியானவர் என்பதை மத்திய அரசே உணரும் என்று நம்புகிறன்.

கருணாநிதியின் லட்சியங் கள், உழைப்பு, பேரன்பு ஆகிய வற்றை கொண்டு மு.க.ஸ்டா லின் திமுக தலைவராக இருந்து கட்சியை வழிநடத்துவார் என நாடு நம்புகிறது. நானும் வாழ்த்துகிறேன். இவ்வாறு வைரமுத்து கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x