Published : 12 Aug 2018 07:41 AM
Last Updated : 12 Aug 2018 07:41 AM

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம், ஸ்ரீரங்கத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்: கடலிலும், காவிரியிலும் திரளானோர் நீராடினர்

ஆடி அமாவாசையை முன் னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலிலும், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரிப் படித் துறையிலும் சென்னை மெரினா கடற்கரையிலும் ஆயிரக்கணக்கா னோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து நீராடினர்.

ஆடி அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் முன்னோர் களின் நல்லாசியை பெறலாம் என்பதும், சிறந்த வாழ்க்கை அமை யும், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கி யம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. இதனால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பக்தர்கள் ராமேசுவரத்துக்கு அதிக அளவில் வருவார்கள்.

அதன்படி, நேற்று ஆடி அமாவாசை என்பதால் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், கேரளம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், ராமேசுவரத்துக்கு வந்து அக்னி தீர்த்தக் கடலில் நீராடி தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாத சுவாமி கோயிலில் அதி காலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 6 மணியளவில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ராமர், சீதா, லட்சுமணர் தங்கக் கருட வாகனத் தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள் பாலித்தனர்.

அக்னி தீர்த்தக் கடலில் முன் னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த துடன் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பக்தர் கள் நீராடி ராமநாத சுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்தனர்.

இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் சேதுகரை, தேவிப்பட் டினம் மற்றும் வைகை நதி நீர்நிலைகளிலும் ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

இதேபோல திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரிப் படித்துறையில் நேற்று அதிகாலை முதலே திரளானோர் வந்து தங்களின் முன்னோர்களுக்கு தர்ப் பணம் கொடுத்து வழிபட்டனர். பின்னர், காவிரியில் நீராடிச் சென் றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு புஷ்ய மண்டபம் காவிரிப் படித்துறையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடலில் திரளானோர் தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோரை வழிபட்டனர்.

சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள்

விருதுநகர்

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலை யில் நேற்று ஒரே நாளில் 25 ஆயிரம் பக்தர்கள் தரி சனம் செய்தனர். நெரிசலால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

விருதுகர் - மதுரை மாவட்ட எல்லைப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் திருவில்லி புத்தூர் சாம்பல் நிற அணில் சரணாலய பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு 18 சித்தர் களால் பூஜித்து வழிபட்ட சுயம்பு லிங்கங்களான சுந்தர மகாலிங்கம் கோயிலும், சந்தன மகாலிங்கம் கோயிலும் உள்ளன. இக் கோயில்களில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமி தரிசனத்துக்காக ஒரே நாளில் 25 ஆயிரம் பக்தர்கள் சதுரகிரியில் குவிந்தனர். கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது.

நேற்று அதிகாலை ஏராளமான பக்தர்கள் மலையேறத் தொடங்கினர். அப்போது, ஏற்கெனவே நேற்று முன்தினம் சுவாமி தரிசனத்துக்காக சதுரகிரி மலையில் தங்கியிருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று கீழே இறங்கிச்செல்ல அறிவுறுத்தப்பட்டனர். அதையடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையிலிருந்து கீழே இறங்கத் தொடங்கினர். ஒரே சமயத்தில் மலையேறும் பக்தர்களும், இறங்கும் பக்தர்களும் குறுகிய மலைப்பாதையில் செல்ல நேர்ந்ததால் சில இடங்களில் நெரிசல் ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x